Loading

இந்திய இரயில்வே: நீங்கள் இந்திய இரயில்வேயில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானது. அதன்படி நவம்பர் 26 முதல் 27 வரை நள்ளிரவில் மூன்றரை மணி நேரம் PRS சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பல சேவைகள் தடைபடும் என வடக்கு ரயில்வே கூறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நீங்களும் இரயில்வே தொடர்பான பிளானிங் செய்கிறீர்கள் என்றால், முதலில் இந்த செய்தியைப் படியுங்கள்.

ரயில்வே பயணிகளுக்கு ஒரு பெரிய செய்தி
ரயில்வே வழங்கிய தகவலின்படி, இந்திய ரயில்வேயின் பிஆர்எஸ் சேவைகள் நவம்பர் 26 முதல் 27 வரை நள்ளிரவில் மூன்றரை மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்படும். இந்த தகவலை வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு புத்தாண்டில் எக்கச்சக்க பரிசுகள்

ரயில்வே வழங்கிய தகவலின்படி, ஆன்லைன் டேட்டாபேஸ் வேலை காரணமாக சில சேவைகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த சேவையின் இடையூறு காரணமாக, ரயில்வே முன்பதிவு, ரத்து செய்தல், சார்ட்டிங், 139 சேவைகள், கவுண்டர் சேவைகள், இணைய முன்பதிவு உள்ளிட்ட EDR சேவைகளும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படும். நவம்பர் 26 ஆம் தேதி இரவு 11.45 மணி முதல் நவம்பர் 27 ஆம் தேதி அதிகாலை 3.15 மணி வரை இந்தச் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவைகளில் இடையூறு ஏன்?
இந்த அறிவிப்பு எதற்காக வெளியிடப்பட்டுள்ளது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. உண்மையில், ரயில்வே தனது பயணிகள் முன்பதிவு முறையை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கிறது, இதனால் அது பயணிகளுக்கு வசதியாக உள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் தற்போதுள்ள பிஆர்எஸ் முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றக் குழுவிடம் முன்பு தெரிவித்திருந்தது. இதற்காக, ரயில்வேயை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க, ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | ரயில்வே டிக்கெட் ஏஜெண்டை ஓவர் டேக் செய்து டிக்கெட்டை கன்பார்ம் பண்ணுங்க! ஐஆர்சிடிசி டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *