IND vs NZ 1st ODI Score LIVE Updates: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. 

உலககோப்பை டி20 தோல்விக்கு பிறகு இந்திய அணியின் டி20 முகத்தை மாற்ற பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு, ஹர்திக் பாண்ட்யா தலைமையில் புதிய டி20 அணியும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் இந்திய அணி, அங்கு நடைபெற்ற டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த தொடருக்கு கேப்டனாக பொறுப்பு வகித்த ஹர்திக் பாண்ட்யா டி20 கேப்டன்சியில் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் தொடர்ந்து முதல் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டி என விளையாட திட்டமிடப்பட்டது. இதில் டி20 தொடர் ஹர்திக் பாண்டியா தலைமையிலும், ஒருநாள் போட்டித் தொடர் ஷிகர் தவான் தலைமையிலும் நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கும் என பிசிசிஐ அறிவித்தது. ஏற்கனவே டி20 போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி ஆசத்தியது. 

இதில் இன்று ஷிகார் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஒருநாள் போட்டியில் களம் இறங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு பெரிதும் இளம் வீரர்களைக் கொண்டு நியூசிலாந்து பயணத்தை நடத்த திட்டமிட்ட பிசிசிஐ, இந்திய அணியின் தேர்வுக் குழு வையும் முற்றிலுமாக களைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணி இனி அமையவுள்ள புதிய தேர்வுக் குழுவால் கட்டமைக்கப்படும் என்பதால் இந்த போட்டித் தொடர் மிகவும் கவனத்துக்கு ஆளாகியுள்ளது. இந்த தொடரை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் வீரர்கள் தங்களின் இருப்பை உறுதி செய்துகொள்ள கூடுமான வரை முயற்சி செய்வார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம்.  

இந்தியா ஆடும் லெவன் 

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து ஆடும் லெவன்

ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கேப்டன்), டாம் லாதம்(விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล