International

oi-Vigneshkumar

பிரேசிலியா: பிரேசில் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நீங்கள் கனவிலும் கூட யோசிக்கவே முடியாத ஒரு புகாரை முன்வைத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

திருமணம் என்பது பொதுவாகச் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்கள். ஆனால், சிலருக்கு இந்த நிச்சயமும் சரி, திருமணமும் சரி பூமியில் கடைசி வரை நடக்காமலேயே போய்விடுகிறது.

இந்தியாவில் கூட அரேன்ஜ் மேரேஜ் என்று ஒன்று இருப்பதால் பலருக்கும் திருமணம் நடந்து விடுகிறது. ஆனால், வெளிநாடுகளில் இன்னும் கூட பலருக்கும் திருமணங்கள் நடைபெறுவதில்லை.

நான் தோத்துட்டேன்.. தேர்தல் செல்லாது! வழக்கு போட்ட பிரேசில் வலதுசாரி தலை! ப்பா இவ்வளவு கோடி அபராதமா? நான் தோத்துட்டேன்.. தேர்தல் செல்லாது! வழக்கு போட்ட பிரேசில் வலதுசாரி தலை! ப்பா இவ்வளவு கோடி அபராதமா?

 சிங்கிள் பசங்க

சிங்கிள் பசங்க

கடைசி வரை அவர்கள் தனியாகவே வாழ வேண்டிய சூழல் இருக்கிறது. இதில் ஆண்கள், பெண்கள் என்று விதிவிலக்கு இல்லை. அனைத்து தரப்பினருக்கும் பாவம் இதே நிலைதான். இதனால், எப்போதுமே தனிமையில் இருக்கும் ஆண்களும், பெண்களும் சில வினோதமான முடிவுகளை எடுப்பார்கள். அதாவது பொம்மை, நாய் அவ்வளவு ஏன் தலையணையை கூட திருமணம் செய்த கேஸ்கள் உள்ளன. அப்படியொரு சம்பவம் தான் பிரேசிலில் நடந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு, அந்த பெண் கூறிய விஷயம் தான் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

 பிரேசில் பெண்

பிரேசில் பெண்

பிரேசில் நாட்டை சேர்ந்த மெய்ரிவோன் ரோச்சா என்ற பெண்ணுக்குப் பல ஆண்டுகளாகத் திருமணம் ஆகவில்லை. சிலரைக் காதலித்து இருந்தாலும் கூட அது திருமணத்தில் முடியவில்லை. இதன் காரணமாக இந்த பிரேசில் பெண், ஒரு பொம்மையைத் திருமணம் செய்து கொண்டார். அதாவது அந்த பொம்மைக்கு ஆண் போல மேக்அப் போட்டு, அதையே இவர் திருமணம் செய்து கொண்டார். 37 வயதான அந்த பெண் கடந்த ஆண்டு தான் இந்த பொம்மையைத் திருமணம் செய்து கொண்டார்.

 பொம்மை உடன் திருமணம்

பொம்மை உடன் திருமணம்

அதிலும் இந்த பெண்ணுக்குப் பொம்மை என்றால் கோபம் வந்துவிடும். அது தனது காதல் கணவர் என்றும் அதன் பெயர் மோரேஸ் என்றும் பார்க்கும் அனைவரிடமும் கூறுவார் மெய்ரிவோன் ரோச்சா. கடந்த ஆண்டு மோரேஸ் பொம்மை திருமணம் செய்து கொண்டதன் மூலம் மெய்ரிவோன் ரோச்சா, சர்வதேச அளவில் பிரபலமானார். பல காலமாக சிங்கிளாக இருப்பதால், டான்ஸ் ஆட கூட ஆள் இல்லை என புலம்பி உள்ளார் மெய்ரிவோன் ரோச்சா. மகளின் புலம்பலைக் கேட்டு அவரது தாயார் தான் இந்த பொம்மையைத் தைத்துத் தந்து உள்ளார்.

 ஒரே புலம்பல்

ஒரே புலம்பல்

மோரேஸை காதலிப்பதாகக் கூறிய மெய்ரிவோன் ரோச்சா கடந்த ஆண்டு அதைத் திருமணமும் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே மிக விரைவில் முதலாம் ஆண்டு கொண்டாட்டமும் கூட நடக்க உள்ளது. இந்தச் சூழலில் தனது பொம்மை கணவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக டிக்டாக்கில் புலம்பித் தள்ளியுள்ளார் மெய்ரிவோன் ரோச்சா. கண்ணீருடன் தனது பொம்மை கணவர் குறித்து இவர் பேசும் வீடியோ தான் டிக்டாக்கில் டிரெண்டிங். இந்த வீடியோவை மட்டும் சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து உள்ளனர்.

என்னாச்சு

என்னாச்சு

அந்த டிக்டாக் வீடியோவில் மெய்ரிவோன் ரோச்சா, “எனக்குக் கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மூன்று நாட்கள் நான் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது எனது கணவர் மோரேஸ் (பொம்மை கணவர் தான்) வேறு ஒரு பெண்ணுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இதை நேரில் பார்த்த எனது தோழி தான் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார். முதலில் இதை நான் நம்பவில்லை.

 உடைந்துப் போனேன்

உடைந்துப் போனேன்

ஆனால், பின் நான் அவரது (அதே பொம்மை கணவர்) ஃபோனை செக் செய்தேன். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் ஃபோட்டோக்களையும் கண்டுபிடித்தேன். இதையெல்லாம் பார்த்ததும் நான் அப்படியே உடைந்து போனேன். எனது காதல் கணவர் என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார். இது தொடர்பாக நான் கேட்டால் அவர் முற்றிலுமாக அனைத்தையும் மறுக்கிறார்.

 குழம்பிய நெட்டிசன்கள்

குழம்பிய நெட்டிசன்கள்

மேலும், இப்போதும் கூட என்னை மட்டுமே காதலிப்பதாகச் சத்தியம் செய்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை” என்று கூறி அழுது புலம்புகிறார். மேலும், அந்த பெண் தனது பொம்மை கணவருடன் ஜாலியாக இருந்தது தொடர்பான படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார். இந்த பெண்ணின் புகாரை நெட்டிசன்களால் நம்பவே முடியவில்லை. நெட்டிசன்கள் பலரும் இந்த பெண்ணுக்கு மன ரீதியான ஆலோசனை தேவை என்றே கூறி வருகின்றனர்.

English summary

Brazil women said her toy husband is having Relationship with other woman: World bizarre news in tamil

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *