Loading

ஒற்றை பெயரை மட்டும் கொண்டிருந்தால் இனி தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் குறிப்பிட்டு ஐக்கிய அரபு அமீரகம் புதிய தடையை விதித்து பயணிகளின் தலையில் இடியை போட்டுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஐக்கிய அரபுமீரகத்துக்கு பணி, தொழில் மற்றும் கல்வி நிமித்தமாக பலரும் பயணித்தாலும், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். இப்படி இருக்கையில், ஐக்கிய அரபு அமீரகம் தனது வர்த்தக கூட்டாளர்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனங்களுக்கு முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது.

image

அதில், இந்தியாவில் இருந்து வரக் கூடிய பயணிகளின் பாஸ்போர்ட்டில் முதல் மற்றும் கடைசி பெயர்கள் (First and Last Name) இல்லாவிட்டால் தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என ஐக்கிய அரபு அமீரகம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, இது கடந்த திங்களான நவம்பர் 21ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவித்திருக்கிறது.

அதாவது பயணிகள் தங்களது பெயருக்கு பின்னால் Surname எனும் தந்தை பெயர் அல்லது குடும்ப பெயர்களை கொண்டிருக்காவிட்டால் அனுமதிக்க முடியாது என்றும், அமீரக குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் பாஸ்போர்ட்டில் பெயருக்கு பின்னொட்டாக சர்நேம் இருப்பவர்களுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

image

Visitor, tourist, Work அடிப்படையிலான விசா பெற்றிருந்தாலும் ஒற்றை பெயரைக் கொண்டிருக்கும் பயணிகளை இனி அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய தடை உத்தரவு குறித்து மேலதிக தகவல்களை தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் பயணிகள் தங்களது பயண ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *