கொள்ளையடிப்பதற்காக வங்கிக்கு Uber Cab (ஊபெர் கேப்) புக் செய்து போனதோடு, தான் கொள்ளையடித்துவிட்டு திரும்பி வரும் வரை காத்திருக்கும்படி டிரைவரிடம் அறிவுறுத்தியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர்.

கொள்ளை, திருட்டு வழக்குகளில் பல விநோதமான சம்பவங்கள் நடப்பதுண்டு. அப்படியான ஒன்றுதான் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஹண்டிங்டன் வங்கியில் கடந்த வியாழனன்று, கிழக்கத்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடந்த கொள்ளை சம்பவம்.

image

சவுத் ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த ஜேசன் க்றிஸ்துமஸ் (42) என்ற நபர் வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஊபெரில் கேப் புக் செய்து சென்றிருக்கிறார். வங்கியில் இருந்து வரும் வரை காத்திருக்கும் படியும் டிரைவரிடம் ஜேசன் கிறிஸ்துமஸ் கூறியிருக்கிறார்.

வங்கியில் கொள்ளையடித்த பிறகு லேஷெரில் உள்ள அப்பார்மென்ட் காம்ப்ளக்ஸுக்கே ஜேசன் மீண்டும் சென்றிருக்கிறார். இதனையடுத்து வங்கியில் இருந்து பெறப்பட்ட புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சவுத் ஃபீல்ட் போலீசாரிடம், கொள்ளையனிடம் சிவப்பு சாயம் பூசப்பட்ட பொருள் இருந்ததாகவும், அதில் கொள்ளையடித்த பணத்தை வைத்து எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

image

இதை தொடர்ந்து, வங்கிக்கு வெளியே இருந்த சிசிடிவி மற்றும் ஜேசன் வந்த காரின் நம்பர் ப்ளேட் ஆகியவற்றைக் கொண்டு கொள்ளையன் ஜேசன் கிறிஸ்துமஸை கண்டுபிடித்து கைது செய்திருக்கிறார்கள். கொள்ளைக்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை என்றாலும், ஹாலிடே சீசன் என்பதால் கொள்ளையை நிகழ்த்தியிருக்கலாம் என்றும் போலீசார் கூறியிருக்கிறார்கள்.

மேலும், “கேப் அல்லது டாக்சியில் செல்லும் போது அதன் டிரைவரிடம் வாடிக்கையாளர்கள் தங்களது அடையாள அட்டையை பகிர வேண்டும். அப்போதுதான் சட்டப்படி ஏதும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்” என சவுத் ஃபீல்ட் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

image

இதுபோக, கைது செய்யப்பட்ட ஜேசனின் லைசென்ஸ் சஸ்பென்ட் செய்யப்பட்டதாலும், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்து அவர் கவலைப்பட்டதாலும் ஊபெர் கேபில் சென்றதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதற்காக ஜேசன் க்றிஸ்டியனுக்கு 5,00,000 டாலருக்கு பத்திரம் (4.04 கோடி ரூபாய்) போடப்பட்டுள்ளதாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: