தமிழ்நாடு:

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவு பட்டியல் சமூக வளைதளங்களில் போலியாக பரவுகிறது, விண்ணப்பதாரர்கள் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்க டி.என்.பி.எஸ்.சி வேண்டுகோள்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் ரூபி மனோகரன் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிறுத்தி வைப்பு, உறிய வழிமுறைகளை பின்பற்றாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவிப்பு

பா.ஜ.கவிலிருந்து சூர்யா சிவா அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம், பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் அண்ணாமலை நடவடிக்கை

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி கடிதம், சட்ட மசோதாவின் காலம் வரும் 27ஆம் தேதி முடிவடையும் நிலையில் விளக்கம் கேட்பு

கொள்கைக்காக எதையும் செய்யலாம், பதவிக்காக எதையும் செய்ய இயலாது என மு.க. ஸ்டாலின் பேச்சு

கரூரில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த சத்தீஸ்கரை சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 14 பேர் மீட்பு, இருவரை கைது செய்து போலீசார் விசாரணை

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு, சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் கனிப்பு

இந்தியா:

தேர்தல் ஆணையர் நியமனங்கள் மர்மமாக இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து, அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்ததால் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பட்ஜெட் குறித்த ஆலோசனைக்காக மாநில நிதி அமைச்சர்களை சந்திக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்பு

கொரோனா மருந்து விநியோக ஒப்பந்தம் பெற்றுத்தருவதாக கூறி மோசடி: மத்திய அரசு அதிகாரி போல்  நடித்து 3 கோடி மோசடி செய்த நபரை உத்திர பிரதேசத்தில் கைது

கோவாவில் நடைபெறும் தேசிய திரைப்பட விழா, தங்க மயில் விருதுக்கான போட்டியில் குரங்கு பெடல் என்ற தமிழ்ப்படம் இடம்பெற்றுள்ளது

எதிரி நாடுகளின் ரேடார்களை தாக்கும் அதிநவீன ருத்ரா ஏவுகனை, 14,000 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசிடம் சமர்பித்தது இந்திய விமானப்படை

உலகம்:

மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் அன்வர் இப்ராஹிம், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத்தால் மன்னர் அழைப்பின் பேரில் பதவியேற்பு

ஸ்வீடனில் கடும் பனிப்பொழிவால் ரயில், பேருந்து சேவைகள் பாதிப்பு, பனிக்களத்திற்கான பிரத்தியேக டயர்களை பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல், புதிய உச்சத்தை தொட்ட தினசரி பாதிப்பு

விளையாட்டு:

22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கானா அணியை வீழ்த்தியது போர்ச்சுக்கல் அணி, செர்பியாக்கு எதிரான மற்றொரு போட்டியில் பிரேசில் அணி வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ புதிய சாதனை: தொடர்ந்து 5 உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்து அபாரம்

இந்திய நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் சிரிக்கெட் போட்டி, ஆக்லாண்டில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล