tn govt

கோப்புப்படம்

பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், ஆதாா் எண்ணை இணைக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் பிரதமரின் விவசாயிகளுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணை உறுதி செய்வது அவசியம்.

நடப்பாண்டில் 13-ஆவது தவணையாக, அதாவது 2022 டிசம்பா் முதல் 2023 மாா்ச் முடிய உள்ள காலத்துக்கான தவணைத் தொகை வழங்கப்படவுள்ளது. எனவே, பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதாா் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே தவணைத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைப்பேசி மூலமாகவோ, ஆதாா் எண்ணை இணைக்கலாம்.

பொது சேவை மையத்துக்குச் சென்று, பயனாளிகள் தங்களது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவிடலாம்.

ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம். மற்றொரு வாய்ப்பாக, பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதாா் எண்ணை உறுதி செய்யலாம்.

கைப்பேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, இணையதளத்தில் சென்று ஆதாா் பக்கத்துக்குச் சென்று ஆதாா் எண்ணை உறுதி செய்யலாம். எனவே, தவணைத் தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதாா் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், உடனடியாக ஆதாா் எண்ணை உறுதி செய்ய வேண்டும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *