டெல்லியில் நடைபெற்று வரும் 2023 – 2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், மாநிலங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்ததாக தெரிய வந்தது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, ”தென்னிந்தியா, வட இந்தியா என்பதற்கு அப்பாற்பட்டு கிட்டதட்ட எல்லா மாநிலங்களும் மாநிலத்தில் நிதி உரிமைகள் குறைந்துகொண்டே வருகிறது. இந்த நிலைமையை சீர்செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

மாநிலங்களுடைய நிதி ஆதாரங்களையும், அதிகாரத்தையும் திருப்பி நிலைநாட்ட வேண்டும். எப்படி இந்திய அரசாங்கத்தில், வாஜ்பாய் அரசாங்கத்தில் இருந்ததுபோல கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதே கருத்தை அந்தந்த மாநில அமைச்சர்கள் சொன்னார்கள்.

அதேபோல், பொருளாதார நெருக்கடி உலகளவில் வருவதற்கான வாய்ப்பு உள்ள சூழ்நிலையில், மாநிலத்தின் கடன் நிலைகளின், ஜிஎஸ்டியையும் 2 வருடம் நீடிக்க வேண்டும் என்றும்,மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும். தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ. 11,185,82 கோடியை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மத்திய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைவெளியை களைய வேண்டும். இரண்டு அரசுகளும் தலா 49 சதவீதம் பங்களிப்பை அளிக்க வேண்டும்.

சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணியை இரு தரப்பும் 50-50 என்ற பங்களிப்பின் அடிப்படையிலான ஒப்புதல் அளித்து, உரிய நிதியை வரும் 23-24 பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு உரிய ரயில்வே திட்டங்களை வழங்க வேண்டும்" என்றார்.

தமிழ்நாட்டின் கோரிக்கை என்ன..?

15வது நிதிக்குழுவில் நமக்கு வரவேண்டிய 2,600 கோடி ரூபாய் மானியம் வெளியிடப்படவில்லை.

சென்னை வெள்ளத்தில் இருந்து தப்பிக்க 500 கோடி பரிந்துரை செய்யப்பட்டது. அதுவும் இன்னும் வரவில்லை.

600 கோடி மதிப்பிலான தாம்பரம்- செங்கல்பட்டு 4வது ரயில் பாதை அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க கோரிக்கை.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து தொடங்கவும் கோரிக்கை.

சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்க வேண்டும்.

அத்திப்பட்டு- கும்மிடிப்பூண்டி, திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி – ஓசூர் ரயில் திட்டத்துக்கு நிதி தேவை.

அரக்கோணம்- காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இடையிலான இருவழி ரயில்பாதைக்கு நிதி ஒதுக்கவும் கோரிக்கை

இத்தகைய கோரிக்கைகளை தமிழ்நாட்டுக்கு விரைந்து செய்து தரவேண்டுமென தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *