கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிமன்றம் கோபம்… மயங்கி விழுந்த சுவாதி! 

கோகுல்ராஜ்

மிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி, நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி அளித்த வாக்குமூலத்தைக் கேட்ட நீதிபதிகள், “சாதி, மதத்தை விட சத்தியம், தர்மம், நியாயம் முக்கியம்” என்று கோபத்துடன் கூறினர். மேலும் சுவாதி வாக்குமூலம் அளித்தபோது திடீரென மயக்கமடைந்து விழுந்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோகுல்ராஜ் கொலை வழக்கும் தண்டனையும்

தமிழகத்தில் இளவரசன் – திவ்யா விவகாரத்தைப் போன்று மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை. இந்த வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு

சுவாதி பிறழ் சாட்சி

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,

* “கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை பார்க்கும்போது, விசாரணையின் தொடக்க காலத்தில் சுவாதி நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார். ஆனால் அதற்கும், 164 வாக்குமூலங்கள் வழங்கியதற்கும் இடையில் ஏதோ நிகழ்ந்துள்ளது.

* நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது.

எனவே சாட்சி சுவாதியை நவம்பர் 25 ம் தேதியன்று ( இன்று ) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்”என உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, சுவாதி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

‘வீடியோவில் இருப்பது நான் இல்லை’

அப்ப்போது நீதிபதிகள் அவரிடம் , “கோகுல்ராஜ் உங்களுடன் படித்தாரா? சக மாணவர்களுடன் பேசுவதுபோல் உங்களுடன் பேசுவாரா?” எனக் கேட்டனர். அதற்கு அவர்,

* ” கோகுல்ராஜ் கல்லூரியில் என்னுடன் பயின்றார். ஒரே வகுப்பு. சக மாணவரைப் போல கோகுல்ராஜைத் தெரியும். அவர்களோடு பேசுவது போல, கோகுல்ராஜிடமும் பேசியுள்ளேன்” என்றார்.

* வீடியோவில் அந்த பெண் அருகில் இருக்கும் பையன் யார் என நீதிபதிகள் கேள்விக் கேட்டனர், அதற்கு கோகுல்ராஜ் போல தெரிகிறது என சுவாதி கூறினார்.

அப்படியானால், அந்த பெண் நீங்கள் இல்லையா என நீதிபதிகள் மூன்று முறை கேட்டபோதும், அந்த பெண் யார் என தெரியவில்லை என சுவாதி கூறிவிட்டார்.

” 23.6.2015 அன்று நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா… நினைவு இருக்கிறதா… அன்று கோகுல்ராஜை பார்த்தீர்களா?” என நீதிபதிகள் கேட்டபோது, ” அன்று பார்க்கவில்லை” என சுவாதி பதிலளித்தார்.

‘வாக்குமூலத்தில் முரண்பாடுகள்’

இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து நீதிபதிகள் சுவாதியை பார்த்து, ” மாஜிஸ்திரேட்டிடம் கூறிய வாக்குமூலத்திலும், தற்போது கூறிய வாக்குமூலத்திலும் முரண்பாடுகள் உள்ளன” என்று கூறியதோடு,

* முன்பு சுவாதி அளித்த வாக்குமூலத்தை வாசித்துக் காண்பித்தனர். அதற்கு, “காவல்துறையினர் ஒரு ஷீட்டில் எழுதிக் கொடுத்து சொல்லச்சொன்னார்கள் சொன்னேன்” என சுவாதி பதிலளித்தார்.

நீதிமன்றம்

நீதிபதிகளின் கோபம்… மயங்கி விழுந்த சுவாதி

அதனைத் தொடர்ந்து, “வீடியோவில் உங்களை பார்த்து நீங்கள் தெரியவில்லை எனக் கூறுகிறீர்கள்.

* நீங்கள் இங்கு புத்தகத்தில் கை வைத்து உண்மை தகவல்களை கூறுவதாக சத்தியம் செய்தீர்கள். ஆனால் தற்போது முரணான தகவல்களை கூறி வருகிறீர்கள். நீதிமன்றத்தை என்ன விளையாட்டு மைதானமாக கருதுகிறீர்களா..?

* சாதி, மதத்தை விட சத்தியம், தர்மம், நியாயம் முக்கியம்” எனக் கடுமையாக கூறினர்.

மேலும், ” நீங்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதில் உண்மை தெரிந்துவிடும்” எனக் கோபத்துடன் நீதிபதிகள் கூறியதைக் கேட்டவுடன்,

* சுவாதி கண்ணீர்விட்டு கதறி அழுத நிலையில், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து 15 நிமிடங்கள் ஒத்திவைப்புக்குப் பின்னர் விசாரணை மீண்டும் தொடங்கியபோது, வரும் 30 ம் தேதி சுவாதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினமும் இதே நிலை தொடர்ந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.

தமிழக மக்களுக்கு ‘மதுரை எய்ம்ஸ்’ எட்டாக் கனியா..?

மதுரை எய்ம்ஸ்

‘எய்ம்ஸ் மருத்துவமனை’ என்று சொன்னாலே இப்போதெல்லாம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தான் நமக்குச் சட்டென நியாபகத்துக்கு வருகிறது. அந்த அளவிற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைச் சுற்றிய சர்ச்சைகளும், நீதிமன்ற வழக்குகளும் வரிசைகட்டி நிற்கிறது.

இந்த சூழ்நிலையில், ‘மதுரை எய்ம்ஸ்’ பணிகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதையும், இது குறித்து திமுக, பாஜக என்ன சொல்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

ரூ.9,000 கோடி… ஓட்டமெடுத்த நிதி நிறுவனங்கள்..!

ஆருத்ரா நிறுவனம்

“தமிழகத்தின் பல பகுதியில் நிதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களை கவரும் வகையில், முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 10 – 25 சதவீதம் வரை தருவோம் என்று ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.

இவ்வாறு மோசடி செய்த நிறுவனங்கள் எவையெவை, எங்கெங்கு பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளன என்பது உள்ளிட்ட தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

மாணவர்களிடம் இந்த கேள்வி தேவையா?

Representational Image

கடந்த ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகம், நம் நாட்டில் நடந்த தற்கொலைகள் தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவதாக வந்த செய்தி மிகவும் வேதனை தருவதாக உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் நம் நாட்டில் மட்டும் 1,70,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

மாணவர்களின் மன அழுத்தத்திற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கல்வி மற்றும் அதன் சார்ந்த காரணங்களால் ஏற்படும் பிரச்னைக்கு மூன்று முக்கிய தீர்வுகளை நாம் விவாதிக்கலாம்.

இது குறித்த கட்டுரையை விரிவாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க…

Doctor Vikatan: கெட்ட கொழுப்பை அகற்ற என்ன செய்ய வேண்டும்?

ஹெச்டிஎல் என்பது நல்ல கொழுப்பு. எல்டிஎல் என்பது கெட்ட கொழுப்பு. இந்தக் கெட்ட கொழுப்புதான் ரத்த நாளங்களில் படிந்து ஆபத்தாக மாறுகிறது. நல்ல கொழுப்பானது அதிகம் இருக்கும்போது அது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் சொல்லும் பதிலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘விஜயுடன் கொஞ்சம் மனக்கசப்பாகிடுச்சு..!’ – உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

“ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவதா சொல்லப்படுகிறதே?!”

“சமீபமா விஜய்யை எப்போ சந்திச்சீங்க?”

“ரஜினியுடன் சினிமாவில் இணைந்து வேலை செய்ய வாய்ப்பிருக்கா?”

“பெரியப்பா அழகிரிக்கும் உங்களுக்குமான உறவு பத்திச் சொல்லுங்க?”

– இந்தக் கேள்விகளுடன் மேலும் பல கேள்விகளுக்கு விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட்டில் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล