துபாய் : உலகின் உயரமான குடியிருப்பு கட்டடம் துபாயில் கட்டப்பட்டு வருகிறது. இது எப்போது திறக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. 100 மாடிகளைக்கொண்ட இக்கட்டடம் ‘ஹைபர் டவர்’ என அழைக்கப்படுகிறது.

இதன் உயரம் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது துபாயில் 1289 அடியில் உயரமான குடியிருப்பு கட்டடம் உள்ளது. உலகின் உயரமான குடியிருப்பு கட்டடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க் டவர் (1550 அடி ) இதுவரை உள்ளது. அதை விட உயரமாக ஹைபர் டவர் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகின் உயரமான கட்டடம் புர்ஜ் கலிபா (2716 அடி) துபாயில் தான் உள்ளது. இது வணிக பயன்பாட்டுக்கானது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล