தானே: சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளை களைவதற்காக, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு நபர் சுடுகாட்டில் ‘கேக்’ வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரத்தன், 54. இவர், கடந்த 19ம் தேதி தன் பிறந்த பிறந்த நாளை சுடுகாட்டில் வைத்து விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவில், 40 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ‘கேக்’ வெட்டிய கவுதம் ரத்தன், விருந்தினர்களுக்கு பிரியாணி வழங்கி உபசரித்தார்.

சுடுகாட்டில் பெரிய ‘பேனர்’ வைத்து, கவுதம்கேக் வெட்டுவது பற்றிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுதம், ”சூனியம் மற்றும் பேய் குறித்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே சுடுகாட்டில் வைத்து என் பிறந்த நாளை கொண்டாடினேன்,” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล