இந்திய கிரிக்கெட் அணிக்காக முதன்முறையாக கடந்த 2004ம் ஆண்டு, தனது 19வது வயதிலேயே தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். ஆனாலும், அதன் பிறகு இந்திய அணியில் அவருக்கான நிலையற்றதாகவே இருந்தது. குறிப்பாக தோனி எனும் மாபெரும் ஆளுமை இந்திய அணியில் கோலோச்சியதை தொடர்ந்து, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன தினேஷ் கார்த்திக்கின் தேவை இந்திய அணிக்கு குறைந்து விட்டது என்றே கூற வேண்டும். ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். இதனிடையே, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.

 

கவனம் ஈர்த்த தினேஷ் கார்த்திக்:

தனிப்பட்ட பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்த தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில்  டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி இந்திய அணிக்குள் மீண்டும் வந்தார். தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக கேப்டனாகவும் செயல்பட்டார். 2018ம் ஆண்டு நிதாஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், வங்கதேச அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றி பெற்று தந்தார். இத்ன் காரணமாக 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள், உலகக்கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.  ஆனால், மீண்டும் அவரது ஆட்டம் மோசமடைய, அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

News Reels

மீண்டு வந்த தினேஷ் கார்த்திக்:

இதனிடையே, சர்வதேச போட்டிகளில் வர்ணனையாளரகவும் இருக்க, இனி கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாட மாட்டர் என கூறப்பட்டது. ஆனால், நிச்சயம் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என தினேஷ் கார்த்திக் பேட்டி ஒன்றில் கூறினார். அதற்கேற்றார்போல், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக, பினிஷராக சிறப்பாக செயல்பட்டார். அவரது அதிரடி ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமின்றி, பிசிசிஐ தேர்வுக்குழுவினரின் கவனத்தையும் ஈர்த்தது. 

தினேஷ் கார்த்திக் (courtesy: dk twitter)

சொதப்பிய தினேஷ் கார்த்திக்:

தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஃபார்மை சர்வதேச போட்டிகளிலும் தொடர, கடந்த மாதம் ஆஸ்திரேலியவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அவர் பெரிதாக சோபிக்காத காரணமாக,. இந்தியா அணியின் கடைசி இரண்டு போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் களமிறங்கினார். உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறவே, சிறப்பாக விளையாடாத மூத்த வீரரகள் மீது கடும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதன் காரணமாக சரியாக விளையாடாத மூத்த வீரர்களை ஓரம்கட்டிவிட்டு, இனி இளம் வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்?:

பிசிசிஐ-யின் புதிய முடிவால் தற்போது 37 வயதான தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுது.  இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தேன். அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்துள்ளது. எங்களது முயற்சியில் நாங்கள் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். ஆனாலும் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சக வீரர்கள் உடன் இருப்பது, இந்திய அணிக்காக விளையாடியது போன்ற காட்சிகளையும், வீடியோவாக தினேஷ் கார்த்திக் அதில் இணைத்துள்ளார். இதன் காரணமாக, இவரும் தோனி பாணியில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளாரா என ரசிகர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

 

இதனிடையே, சில நாட்களுக்கு முன் தினேஷ் கார்த்திக் மீண்டும்  வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. தினேஷ் கார்த்திக் இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล