பிபா உலகக்கோப்பை தொடர் கடந்த நவ.20ஆம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக, அதாவது ஒரு பிரிவில் தலா 4 அணிகள் என்ற வீதத்தில் பிரிக்கப்பட்டுள்ளனர். 

இதில், தங்கள் பிரிவின்கீழ் இருக்கும் மற்ற 3 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதி, பின்னர் பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 16 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16இல் மோதும். இதன் போட்டிகள் குலுக்கல் முறையில் தீர்மானிகப்படும். 

அடுத்தடுத்து அதிர்ச்சி 

அடுத்து காலிறுதி, அரையிறுதி என நாக்-அவுட் சுற்றுகளுக்கு பின் வரும் டிச. 18ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அனைத்து அணிகளும் தலா 1 போட்டிகளை விளையாடிவிட்டன. 

மேலும் படிக்க | கால்பந்து ரசிகர்களுக்கு தமிழக அரசு கொடுத்திருக்கும் ட்ரீட்! இலவசமாக உலக கோப்பையை பார்க்கலாம்

இதில், அர்ஜென்டீனா அணி, கத்துக்குட்டியாக கருதப்படும் ஆசிய அணிகளுள் ஒன்றான சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்தது. இந்த அதிர்ச்சி தனிவதற்குள், மற்றொரு ஆசிய அணியான ஜப்பானிடம், ஜெர்மனி தோல்வியைக் கண்டது. பலம்வாய்ந்த அர்ஜென்டீனா, ஜெர்மனி அணிகள் வளர்ந்துவரும் அணிகளிடம் வீழ்ந்தது, இந்த தொடரின் உயிரோட்டத்தை அதிகரித்துள்ளது. 

இதில், ஜெர்மனி அணி இடம்பெற்றிருக்கும், ஈ பிரிவில்தான் பலம்பெற்ற ஸ்பெயின் அணியும் உள்ளது. எனவே, ஒருவேளை ஸ்பெயினிடம் ஜெர்மனி தோற்றுவிட்டால், ஜெர்மனி தொடர்ந்து 2ஆவது முறையாக குரூப்-சுற்றுடன் வெளியேற நேரிடும். ஸ்பெயின் – ஜெர்மனி போட்டி வரும் 28ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 12.30 மணிக்கு நடைபெறும். 

கோலடித்து சாதனை படைத்த CR7

இதனிடைய, மிகவும் எதிர்பார்ப்பு வாயந்த் போர்ச்சுக்கல் அணி, கானா அணியை நேற்று சந்தித்தது. முதல் பாதியில் எந்த கோலும் பதிவாகவில்லை. தொடர்ந்து இரண்டாவது பாதியின்போது, அதாவது 65ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக மாற்றினார். 

தொடர்ந்து, 73ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் கண்ணசந்த நேரத்தில், கானாவின் ஆண்ட்ரே அய்யூ கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இதையடுத்து, நட்சத்திர வீரர் பர்னோ ஃபெர்னான்டஸ் போர்ச்சுகல் அணியால் களமிறக்கப்பட, அவரின் அஸிஸ்ட் உதவியால் போர்ச்சுகலின் ஃபெலிக்ஸ் 78ஆவது நிமிடத்திலும், ரஃபேல் லியோ 80ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். 

கோல் அடித்த நம்பிக்கையுடன் இருந்த கானாவின் கனவு கோட்டை சுக்குக்காக அப்போது நொருங்கியது. இருப்பினும், 89ஆவது நிமிடத்தில் கானாவின் ஒஸ்மான் புகாரி அந்த அணிக்கு இரண்டாவது கோலை பதிவு செய்தார். ஏறத்தாழ 10 நிமிடங்கள் கூடுதல் ஒதுக்கப்பட்டது. அதில், யாரும் மேற்கொண்டு கோல் அடிக்காததால், 3 – 2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது. பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை ரொனால்டோ பெற்றார். 

முதல் வீரர்

இந்த போட்டியில் பெனால்டி மூலம், இத்தொடரின் முதல் கோலை பதிவு கிறிஸ்டியானா ரொனால்டோ, தான் விளையாடிய 5 உலகக்கோப்பை தொடர்களிலும் கோலடித்து மிரட்டியுள்ளார். இதன்மூலம், 5 வெவ்வேறு உலகக்கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் படைத்தார்.

முன்னதாக, பிரேசில் ஜாம்பவான் பீலே, ஜெர்மனியர்கள் உவே சீலெர், மிரோசிலாவ் கிளோசே உள்ளிட்டோர் நான்கு வெவ்வேறு உலகக்கோப்பை தொடர்களில்தான் கோல் அடித்திருந்தனர். ரொனால்டோ இந்த கோல் மூலம், மொத்தம் 118ஆவது சர்வதேச கோலையும் பதிவுசெய்தார். உலகக்கோப்பை தொடர்களில் இது அவரின் 8ஆவது கோலாகும். 

ரொனால்டோவுக்கு அபராதம் 

ரொனால்டோ கடந்த செவ்வாய்கிழமை அன்று (நவ. 22) மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகியிருந்தார். அந்த அணியுடன் இருந்த கசப்பான அனுபவத்தை நேர்காணல் ஒன்று கூறியதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்கு பின் இந்த முடிவை அவர் எடுத்தார். 

அவர் வெளியேறி அடுத்த இரண்டு நாள்களில், அவருக்கு சுமார் ரூ. 50 லட்சம் அபராதமும், 2 கிளப் போட்டிகளில் விளையாட தடையும் இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பு விதித்துள்ளது. ரசிகரின் செல்போனை பிரீமியர் லீக் தொடரின்போது, வேண்டுமென்ற தட்டிவிட்டதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

போர்ச்சுகல் – கானா போட்டிக்கு பின், நடைபெற்ற பிரேசில் – செர்பியா போட்டியில், பிரேசில் அணி 2 – 0 என்ற கணக்கில் வெற்றியடைந்தனர். இதில், ரிச்சர்லிசன் இரண்டு கோல்களையும் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ரசிகர் செல்போனை தட்டிவிட்ட ரொனால்டோ… 2 போட்டிகளில் விளையாட தடை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล