ராஜினாமா செய்துவிட்டு வெளியேற விரும்பும் பணியாளர்களுக்கு 10,000 யுவான் (ரூபாய் மதிப்பில் 1 லட்சம்) வழங்கத் தொடங்கி உள்ளது ‘பாக்ஸ்கான்’ நிறுவனம்.   

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, அந்நாட்டில் இயங்கிவரும்  ‘பாக்ஸ்கான்’ என்ற ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை, அதன் ஊழியர்களை ஆலையில் தங்கி பணியாற்றும்படி உத்தரவிட்டது. இந்த ஆலையில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், சம்பளம் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி பணியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் பாக்ஸ்கான் ஆலையில் திடீரென வன்முறை மூண்டது. பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

image

இதனைத் தொடர்ந்து தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக ஊதியம் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டு விட்டதாகக் கூறி நடைபெற்ற சம்பவங்களுக்காக பாக்ஸ்கான் நிறுவனம் மன்னிப்பு கோரியது. மேலும் நிறுவனத்திலிருந்து பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற விரும்பும் பணியாளர்களுக்கு 10,000 யுவான் (இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம்) வழங்கத் தொடங்கி உள்ளது பாக்ஸான்.

இதையும் படிக்கலாமே: சீனாவில் உச்சத்தை தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு – கடுமையான கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லையா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *