புதுடில்லி : பாலிவுட்டின் நடிகர் அமிதாப்பச்சன்,80, வழக்கறிஞர் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: ஒரு லாட்டரி நிறுவனம் அமிதாபின் அனுமதியின்றி அவரது பெயர் மற்றும் குரலை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து மோசடி செய்து வருகிறது.
எனவே, அமிதாப் பெயர், படம் மற்றும் அவரது குரலை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, நடிகர் அமிதாப் அனுமதியின்றி அவரது பெயர், படம் மற்றும் குரலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து, விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement