பானா காத்தாடி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகனான இவர் ஜெமினி கனேசனும் சுருளி ராஜனும், ஈட்டி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, பரதேசி படத்தில் எமோஷனிலும், நடிப்பிலும் கலக்கியிருப்பார், அதர்வா. இவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள் அதிகம். தமிழில் இளம் நடிகர்களாக இருக்கும் கெளதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் திரமணம்-காதல் என கடந்து போய்க் கொண்டிருக்க, இளம் ரசிகைகளுக்கு ஒரே ஹோப் ஆக இருப்பது அதர்வா மட்டும்தான் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவிப்பதுண்டு. நல்ல கதையம்சங்கள் உடைய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், அடுத்து பட்டத்து அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பட்டத்து அரசன்:

களவாணி, சண்டி வீரன், வாகை சூடவா உள்ளிட்ட நல்ல படங்களைக் கொடுத்த இயக்குனர் சர்குணத்தின் அடுத்த படம்தான் பட்டத்து அரசன். இப்படத்தினைய லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வழங்குகிறது. கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில, அதர்வா ஹீரோவாக நடிக்க, இவருடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் ராஜ் கிரண் நடிக்கிறார். பட்டத்து அரசன் படத்தின் ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த கபடி போட்டி காட்சிகளும், கிராமத்து கதாப்பாத்திரங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. பட்டத்து அரசன் திரைப்பம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. அப்படி ஒரு நிகழ்ச்சியில், ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் அதர்வா பதிலளித்துள்ளார்.

ரசிகர்களுடன் வேடிக்கையான கேள்வி பதில்..

சமீபத்தில் நடந்த பட்டத்து அரசன் பட நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா அவரது ரசிகர்களை சந்தித்து பேசினார். அது மட்டுமன்றி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் வேடிக்கையாக பதிலளித்தார். அவை பின்வருமாறு:

ரசிகர்:ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படம் மாதிரி ஃபன் படத்தில் நடிப்பது எப்போது?

அதர்வா: எனக்கும் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஆசைதான். ஆனால் எனக்கு ஆக்ஷன் படங்களாக தருகின்றனர். கூடிய விரைவில் ஒரு நல்ல லவ் படத்தில் நடிப்பேன்.

ரசிகர்: வில்லன் ரோலில் நடிக்க ஆசை உண்டா?

அதர்வா: கண்டிப்பாக. வில்லன் கதாப்பாத்திரம் என்றில்லை. நெகடிவ் ரோல் எது கிடைத்தாலும் செய்ய தயாராக இருக்கிறேன்.

ரசிகர்: இது வரை வெளியாகியுள்ள படங்களில் உள்ள கதாப்பாத்திரங்களில் மறுபடியும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பீர்கள்?

அதர்வா: சமீபத்தில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தின் ரோலெக்ஸ் கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படி ஒரு ரோல் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

ரசிகர்: ரொம்ப நாளா முரட்டு சிங்கிளா இருக்கீங்க.. யாராவது உங்கள ரிஜெக்ட் பண்ணிட்டாங்களா..சிங்கிளாகவே இருப்பதற்கு காரணம் என்ன? ஏதாவது காதல் அனுபவங்கள் இருக்கா?

அதர்வா: கண்டிப்பாக காதல் அனுபவங்கள் உள்ளது. அவை வருவதும் சகஜம்தான். ஆனால் பெரிதாக எந்த அனுபவமும் இல்லை.

ரசிகர்: நீங்கள் திருமணம் செய்தால் நீங்கள் போக விரும்பும் ஹனிமூன் ஸ்பாட் எது?

அதர்வா: இப்போதைக்கு கல்யாணம் செய்யும் ஐடியாவே இல்லை. அப்படியே செய்தாலும் ஸ்நோ நிறைந்த இடத்திற்கு போக வேண்டும் என்பது எனது விருப்பம்.

ரசிகர்: சினிமா இன்டஸ்டரியில் இருக்கும் யாராவது உங்களுக்கு ப்ரபோஸ் செய்ததுண்டா?

அதர்வா: ப்ரபோஸ் செய்வது எல்லாம் படத்தில் மட்டும்தான். நேரில் எதுவும் நிகழ்ந்தது கிடையாது. துரதிர்ஷ்டவசமாக அப்படியெதுவும் நிகழவில்லை.

பட்டத்து அரசன் படத்திற்காக லைகா நிறுவனம் நடத்திய இந்நிகழ்ச்சியை விஜய் டிவி புகழ் பாலா மற்றும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பல இளம் ரசிகர் ரசிகைகள் கலந்து கொண்டு அதர்வாவுடன் ஜாலியாக உரையாடினர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล