வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய அரசு சார்பில், அடுத்த மாதம் 6ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 7ல் துவங்கி, டிச., 29ல் முடிவடைகிறது. இதில், மொத்தம் 17 அமர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:

latest tamil news

குளிர்கால கூட்டத் தொடரை எந்தவிதமான பிரச்னையும் இன்றி சுமுகமாவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் 6ல் அனைத்துக் கட்சிகளின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதற்காக அன்று காலை, 11:00 மணிக்கு, பார்லிமென்டில் உள்ள நுாலக வளாகத்துக்கு வரும்படி அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளிக்கும்படி அரசு சார்பில் வலியுறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล