பாட்னா: பிஹாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஊர் பஞ்சாயத்து வெறும் 5 உக்கிகளை (தோப்புக்கரணங்கள்) தண்டனையாக வழங்கியுள்ளது. இந்தத் தண்டனை வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவ இது குறித்து பொதுமக்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். கூடவே, பிஹார் அரசு இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

பிஹாரின் நவாடா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மிட்டாய் வாங்கித்தருவதாகக் கூறி தனது கோழிப் பண்ணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரிகிறது. அவரை கிராமத்தில் ஊர் பெரியவர்கள் எனக் கூறப்படுபவர்கள் முன்னியலையில் பஞ்சாயத்தில் முன் நிறுத்தினர். அந்த பஞ்சாயத்தில் சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்திருக்க வாய்ப்பில்லை. அச்சிறுமியை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்ற குற்றத்திற்காக மட்டும் அவரை தண்டிக்கிறோம். அவர் ஊர் பஞ்சாயத்து முன் ஐந்து உக்கிகள் போட வேண்டும் என்று கூறுகின்றனர். அந்த நபரும் 5 உக்கிகளை அவசர அவசரமாக போட்டுவிட்டு அமர்கிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த சில இணையவாசிகள் முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு டேக் செய்து சிறுமிக்கு நேர்ந்த அவலத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து காவல் கண்காணிப்பாளர் கவுரவ் மங்கலா கூறுகையில், “இச்சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் புரிந்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล