கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரியில் உள்ள ரெடிங்டன் நிறுவனம் சார்பில் அப்பகுதியில் அக்கிரமிக்கப்பட்ட குளம் மீட்கப்பட்டு குளம் வெட்டும் பணி ஒரு கோடி மதிப்பீட்டில் தொடங்கியது.  

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரியில் உள்ள ரெடிங்டன் நிறுவனம் சார்பில் அப்பகுதியில் அக்கிரமிக்கப்பட்ட குளம் மீட்கப்பட்டு குளம் வெட்டும் பணி ஒரு கோடி மதிப்பீட்டில் தொடங்கியது.

கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரியில் ஐந்து ஏக்கர் பரப்பிலான தேசம் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு சிலர் விவசாயம் செய்து வந்தனர்.

இது குறித்து தண்டலசேரி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜ் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்டார். தொடர்ந்து அங்கே குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாத நிலையில் அப்பகுதியில் உள்ள ரெடிங்டன் நிறுவனம் சார்பில் ஒரு கோடி மதிப்பீட்டில் குளம் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டது. 

குளக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

தண்டலசேரி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜ் தலைமை நடைபெற்ற இந்த நிகழ்வில் ரெடிங்டன் நிறுவன ப்ரோ கனெக்ட் துறையின் மனிதவள மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் ராகேஷ், சமூகப் பொறுப்புணர்வு தலைவர் டாக்டர் ஏ.பி.அருண் பிரசாத், சமூகப் பொறுப்புத் துறை திட்ட மேலாளர்கள் மணிகண்டன், ஹரி பிரசாத்,புரோ கனெக்ட் பொது மேலாளர்கள் எல்.சுரேஷ், டி.சம்பத் முன்னிலை வகித்தனர்.

இதையும் படிக்க | இறப்பிலும் இணை பிரியாத வயதான தம்பதி!

தொடர்ந்து ஒரு கோடி மதிப்பிலான குளம் சீரமைக்கும் பணி பூமி பூஜைடன் தொடங்கியது. இதில் தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

குளம் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் திரளாக பங்கேற்ற தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள்.

இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி கஜா, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குமார்,  துணை தலைவர் ராஜா, ஊராட்சி செயலாளர் பொன்னுசாமி, திமுக நிர்வாகிகள் சதீஷ், அன்பழகன், ஹரி, வார்டு உறுப்பினர்கள் புருஷோத்தமன், வெங்கடேசன், ராமஜெயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து குளக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த குளம் அமைக்கும் பணி 3 மாத காலத்தில் நடைபெறும் என்று ரெடிங்டன் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล