வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.43 கோடியாக உயர்ந்து உள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. அதன்பின்னர், கொரோனா வைரஸ் 225-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பல நாடுகளில் அதனை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தன. இதன்பின்னர், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்தன.

எனினும், வைரசானது, உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 617 ஆக உயர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62 கோடியே 31 லட்சத்து 35 ஆயிரத்து 320 ஆக உயர்ந்து உள்ளது. எனினும், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.30 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล