கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள சுவிட்சர்லாந்து அணி, தனது முதல் லீக் போட்டியில் கேமரூன் அணியை எதிர்கொண்டது. அல்-வக்ரா நகரில் அல்-ஜனோப் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதியதால், முதல் பாதி ஆட்டம் கோல் எதும் இன்றி சமநிலையை எட்டியது. இதையடுத்து, இரண்டாவது பாதி தொடங்கிய சிறுதி நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர் எம்போலோ, கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதையும் படிங்க: கடைசி நிமிடத்தில் கேப்டன்ஷிப் மாற்றம்.. ஷிகார் தவான் ஆதங்கம்

ஆனால், கடைசி வரை போராடியும் கேமரூன் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล