புதுடில்லி: ‘தேர்தல் கமிஷன் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம் தொடர்பான ஆலோசனையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் ஏன் சேர்க்கக் கூடாது’ என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள ‘கொலீஜியம்’ முறையை, தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திலும் செயல்படுத்த உத்தரவிடக் கோரி, பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலைமை தேர்தல் கமிஷனர் நியமனத்தில் வெளிப்படைதன்மை இல்லை என அமர்வு கடுமையாக விமர்சித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு கூறியதாவது: மத்தியில் ஆளும் எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆட்சியில் தொடரவே விரும்பும். தனக்கு ஆமாம் சாமி போடுபவர்களையே தேர்தல் கமிஷனில் நியமிக்கும் வகையிலேயே தற்போதைய நடைமுறைகள் உள்ளன. கடந்த 1991ல் இயற்றப்பட்ட தேர்தல் கமிஷன் சட்டம், தேர்தல் கமிஷனர்களின் பணி தொடர்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் தேர்தல் கமிஷன் மிகவும் வெளிப்படையாகவும், தன்னாட்சி உடையதாகவும், சுதந்திரமாகவும் இயங்க வேண்டும். இதற்கு, தேர்தல் கமிஷனர்கள் நியமன நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே, தலைமை தேர்தல் கமிஷனர் நியமிக்கப்படுகிறார்.

latest tamil news

இந்த நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தும் குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற்றால், வெளிப்படைதன்மை ஏற்படும். தேர்தல் கமிஷனில் அனைத்து நிலைகளிலும் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். அது நியமனம் என்ற துவக்க நிலையில் இருந்து துவங்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அருண் கோயல் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.”சமீபத்தில் விருப்ப ஓய்வில் சென்ற அவர், இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது,” என, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த உத்தரவை அமர்வு பிறப்பித்தது.இதற்கு அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த அமர்வு, ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

நான்கு சிறப்பு அமர்வுகள்

பல்வேறு வழக்குகளை அவசரமாக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில், வழக்கறிஞர்கள் பலர் குறிப்பிட்டனர். இதையடுத்து தலைமை நீதிபதி கூறியதாவது:கிரிமினல் மேல்முறையீடு, நேரடி மற்றும் மறைமுக வரிகள், நிலம் கையகப்படுத்துதல், மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, அடுத்த வாரத்தில் இருந்து நான்கு சிறப்பு அமர்வுகள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล