வாரிசு தெலுங்கு வெளியீடு : எந்த சிக்கலும் இல்லாமல் வெளியீடு உறுதி

23 நவ, 2022 – 12:12 IST

எழுத்தின் அளவு:


Varisu-telugu-released-problem-solved

தெலுங்கு தயாரிப்பாளர் தயாரித்திருந்தும், தெலுங்கு இயக்குனர் இயக்கியிருந்தும் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவர உள்ள ‘வாரிசு’ படத்திற்கு எதிராக தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு, சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தயாரித்த தெலுங்குப் படம் சிக்கலில்லாமல் வெளியாவதற்காக அப்போது தமிழிலிருந்து தெலுங்கில் வெளியான ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தை வெளியிட சிக்கலை ஏற்படுத்தினார். நேரடி தெலுங்குப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், டப்பிங் படங்களுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது என்று பேசினார்.

அதை மனதில் வைத்துக் கொண்டு 2023 பொங்கலுக்கு அவர் தயாரித்துள்ள தமிழ்ப் படமான ‘வாரிசு’ படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் முக்கியத்துவம் தராமல், நேரடி தெலுங்குப் படங்களாக வெளியாகும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற விதத்தில் ஒரு மறைமுகமாக அறிக்கையை தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டது. அதன்பின் இரு மொழி திரையுலகத்திலிருந்தும் பல குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விவகாரம் சர்ச்சையானது.

இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் இது குறித்து சந்தித்து விவாதித்துள்ளனர். ‘வாரிசு’ படத்திற்கு எந்த விதத்திலும் தடை விதிக்கவில்லை, நேரடி தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றுதான் சொன்னோம். ஆந்திரா, தெலங்கானாவில் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது குறித்த தகவலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியவற்றிற்கும் தெரிவித்துள்ளார்கள். எனவே, ‘வாரிசு’ படம் தெலுங்கிலும், தெலுங்கு மாநிலங்களிலும் வெளியாவது குறித்த சர்ச்சை தற்போதைக்கு முடிவடைந்துள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล