ஹீரோயின் ஆனார் பாடகி ராஜலட்சுமி

11/11/2022 12:02:11 AM

சென்னை: நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமி, பிறகு திரைப்பட பாடகியாக மாறினார். பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’, தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தில் ‘கத்தரி பூவழகி’, அஜித் குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் ‘டங்கா டங்கா’ உள்பட ஏராளமான பாடல்களை பாடிய அவர், அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் பாடிய ‘சாமி’ என்ற பாடல் மூலம் மேலும் புகழ்பெற்றார். தவிர, சில ஆல்பங்களில் பாடி ஆடியிருக்கிறார். இந்நிலையில், பாடகி ராஜலட்சுமி சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நார்மல் பிலிம் பேக்டரி சார்பில் இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கும் ‘லைசென்ஸ்’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் ராஜலட்சுமியுடன் விஜய் பாரத், ராதாரவி, மதுரை ரிஷி, பேபி அதிதி பாலமுருகன், கிருஷ்ணா நடிக்கின்றனர். கவுண்டமணி நடிப்பில் வெளியான ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தந்தை, மகள் பாசத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล