* அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே மண்டல அளவிலான மாணவர் கபடி போட்டி நடந்தது. காரைக்குடியில் நடந்த இத்தொடரின் பைனலில்  சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி 46-28 என்ற புள்ளிக் கணக்கில்  கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.* சென்னையில் கோகினோஸ்  43வது அழைப்பு தற்காப்பு கலை போட்டி நடந்தது. கட்டா, நுன்சாக் என பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நுன்சாக் கிராண்ட் மாஸ்டர் எஸ்.கோதண்டன் பரிசுகளை வழங்கினார்.* WWE சாம்பியனான டுரூ மெக்கின்டயர் (37 வயது, ஸ்காட்லாந்து), சமீபத்தில்  இந்தியா வந்திருந்தார். நவ.27ம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் தொடங்க  உள்ள ‘WWE சர்வைவர்’ போட்டிக்கான அறிமுக நிகழ்ச்சியில் மெக்கின்டயர்,  நடிகர்கள் கார்த்தி, ஜான் ஆப்ரகாம் ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் போட்டி நவ.27ம் தேதி மாலை 6.30க்கு சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.* டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.* நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து அனுபவ வீரர் மார்டின் கப்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.* இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக லூக் ரைட் (37 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை ஏற்பதற்கு வசதியாக, தொழில்முறை கிரிக்கெட்டுக்கு லூக் ரைட் முழுக்கு போட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்காக 101 சர்வதேச போட்டிகளில் (டி20 & ஒருநாள் இணைந்து) விளையாடி உள்ள இவர், 2010ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியிலும் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.* பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட், திட்டமிட்டபடி டிசம்பர் 1ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கும் என பிசிபி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: