சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை செனைடோ மேரிஸை கைது செய்திருக்கிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக செனைடோ மேரிஸ் காவல்துறையிடம், ” என் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் இருந்ததால் தான் நான் வீட்டை கொளுத்தினேன்” என வாக்குமூலமும் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக, ஊடகங்களிடம் பேசிய காதலன், “இரவில் என்னுடைய வீட்டில் இருந்தது என் உறவுக்காரப் பெண். என்னுடைய பெற்றோரை சந்திக்க வந்திருந்தார். அப்போது அவர் விளையாட்டாக என் காதலியிடம் பேசியிருக்கிறார். ஆனால், அதற்குள் இவ்வளவு பெரிய சம்பவம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிகழ்வில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.ஆனால் ஏறத்தாழ 50,000 டாலர் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.