நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்கள்

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்கள்

இதில், பேட்டரி வாகனத்தை ஒட்டி நின்றிருந்த தூய்மைப் பணியாளர்களான செல்வி, குணசுந்தரி, மாரியப்பன் ஆகிய மூவரும் கடும் காயமடைந்தனர். கை, கால் என பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதையடுத்து அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எந்தவித பாதுகாப்பும் மேற்பார்வையும் இல்லாமல், தூய்மைப் பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்தியதே விபத்துக்குக் காரணம் என மாநகராட்சி நிர்வாகம்மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இது குறித்து திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் (CITU) மாறனிடம் பேசினோம். “திருச்சி ஏர்போர்ட்டுக்கு முதல்வர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் யாராவது வருகிறார்கள் என்றால் எப்போதுமே அந்தப் பகுதியை, மாநகராட்சி நிர்வாகமானது தூய்மைப் பணியாளர்களை வைத்து சுத்தப்படுத்தும். முதலில் அதுவே தவறு. ஏனென்றால், நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அந்தச் சாலையை, நெடுஞ்சாலைத்துறையின் ஆட்களை வைத்துத்தான் சுத்தம் செய்ய வேண்டும். மேலும், நெடுஞ்சாலைகளில் சாலைப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளைச் செய்யும்போது இத்தனை மீட்டருக்கு முன்பு சிகப்புக் கொடி கட்ட வேண்டும், ரிஃப்ளெக்டர்கள், எச்சரிக்கைப் பலகை போன்றவற்றை வைக்க வேண்டும், ஒரு மேற்பார்வையாளர் இருக்க வேண்டும் என சில வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படியான எந்த பாதுகாப்பு வழிமுறைகளையும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுப்பதில்லை. இதனால்தான் இந்த விபத்தும் நடந்திருக்கிறது” என்றார்.

விபத்தில் காயமடைந்த தூய்மைப் பணியாளர்

விபத்தில் காயமடைந்த தூய்மைப் பணியாளர்

தொடர்ந்து பேசியவர், “விபத்து நடந்த ஏர்போர்ட் பகுதியானது பொன்மலை மண்டலம் பகுதிக்குள் இருக்கிறது. ஆனால், முதல்வர் வருகிறார் என்பதற்காக அரியமங்கலம் மண்டலத்திலிருந்து சம்பந்தமேயில்லாமல் தூய்மைப் பணியாளர்களை அழைத்து வந்து வேலை வாங்கியிருக்கின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்ட 3 தூய்மைப் பணியாளர்களுக்கும் உரிய சிகிச்சை மற்றும் அவர்களது பாதிப்புக்கு ஏற்றவாறு உரிய நிவாரணத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். மேலும், பாதுகாப்பு குறைவாக தூய்மைப் பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்திய மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล