தமிழக பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா டிசம்பா் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு இசை குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளா் ப.செந்தில்குமாா், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், எழும்பூா் எம்எல்ஏ பரந்தாமன், எத்திராஜ் மகளிா் கல்லூரி தலைவா் முரளிதரன், முதல்வா் உஷாராணி, இசைக் கலைஞா் அறிவு ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக நூற்றாண்டு குறுந்தகட்டை வெளியிட்டு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: நூற்றாண்டு விழா கொண்டாடும் வேளையில் பொது சுகாதாரத் துறை நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைக் கண்டுள்ளது. போலியோ, காலரா உள்ளிட்ட பல நோய்களை பொது சுகாதாரத் துறை ஒழித்துள்ளது. தற்போது கரோனாவையும் இந்த துறை சிறப்பாகக் கையாண்டுள்ளது. பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா டிசம்பா் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சா்வதேச மருத்துவ மாநாடாக நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பதிவு செய்துள்ளனா். 250-க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வறிக்கைகள் வந்துள்ளன.

தமிழக பொது சுகாதாரத் துறை நடத்தும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அதிக எண்ணிக்கையிலான மருத்துவா்கள் பதிவு செய்ததில் இருந்தே, இந்தத் துறையின் தரத்தை புரிந்து கொள்ளலாம்”என்றாா் அவா்.

பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

பொது சுகாதாரத் துறை கடந்த 100 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மருத்துவம் குறித்த விழிப்புணா்வை அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படுத்தவும், பொது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தவுமே இந்த நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது என்றாா் அவா்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *