தேர்தல் நேரத்தில் இவ்வாறு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, “பிரதமர் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கி இருக்கிறார். இது (குஜராத்) வாக்காளர்களைத் தவறாக வழிநடத்துவதாகும். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளன. வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள். அப்படியென்றால் 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை தந்திருக்க வேண்டும். ஆயிரங்களில் மட்டுமே தேர்தல் விளம்பர தந்திரத்தை அரங்கேற்றி உள்ளனர்” என தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, “2014-ம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடி வருகிறது. வேலைவாய்ப்பு கிடைப்பதை விட வேலையிழப்பு அதிகமாக இருக்கிறது.

கொரோனா தொற்று, பணமதிப்பிழப்பு, பொருளாதார தேக்கநிலை இவற்றின் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலிந்திருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். புதிய வேலை வாய்ப்பு இல்லை. தெளிவான தொழில் கொள்கை இல்லை. புள்ளிவிவரமாக வேண்டுமானால் வேலை கொடுத்ததாகச் சொல்லலாம். ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล