நியூடெல்லி: குரங்கம்மை நோயின் பெயரை ‘MPOX’ என்று மாற்றிட உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நோயின் பெயரை மாற்றுவது அவ்வளவு முக்கியமா என்று நினைக்கலாம். குரங்கம்மையின் பெயர் மாற்றப்படுவதன் பின்னணி மிகவும் நீளமானது. குரங்கு அம்மை நோயின் பெயர் இனவெறியைத் தூண்டுவதாகவும், பாரபட்சமாக இருப்பதாகவும் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வந்தன. அதாவது, வைரஸ் பரவல் மூலம் ஏற்படும் நோய்களுக்கு புவியியல் ரீதியாக பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக இருந்து வந்தன.

எனவே, குரங்கம்மை நோய் மற்றும் வைரஸ்களுக்கு புதிய பெயர் சூட்ட முடிவு செய்த உலக சுகாதார அமைப்பு, அதற்காக, பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகள் கோரியிருந்தது. மேலும், குரங்கு அம்மையின் பிறழ்வுகளுக்கு (varaint Names) புதிய பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த பெயர் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இந்த ‘விஷயங்களை’ தவிர்த்தாலே போதும்

கடந்த பல மாதங்களாக, அமெரிக்க அரசு நிர்வாகம், குரங்கம்மை அதாவது Monkeypox என்ற பெயர், இனரீதியில் இருப்பதாக தெரிவித்து வந்தது. அதிலும், குறிப்பாக நிற அடிப்படையில் மக்கள் மத்தியில், தடுப்பூசி பிரச்சாரத்தை மெதுவாக்கி இருப்பதாக தெரிவித்து வந்தது.  

எனவே, பல தரப்பு கருத்துகளையும் பரிசீலித்த உலக சுகாதார நிறுவனம், Monkeypox என்பதற்கு பதிலாக “MPOX” என மறுபெயரிட திட்டமிட்டுள்ளது என்று, இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி பொலிட்டிகோ செய்தி வெளியிட்டிருக்கிறது. 

இது தொடர்பான முடிவு வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று அமெரிக்க செய்தி நிறுவனம் பொலிட்டிகோ தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவாகியிருந்த வைரஸ் நோய்க்கு Monkeypox என்று பெயர் வைக்கப்பட்டது, இனிமேல் இந்த வைரஸ் MPOX என்று அறியப்படும். 

மேலும் படிக்க | 95 சதவீதம் குரங்கு அம்மை இதன் மூலம்தான் பரவுகின்றன

அமெரிக்க அரசு மட்டுமல்ல, பொது சுகாதார வல்லுநர்கள் மற்றும் LGBT ஆர்வலர்களும் குரங்கம்மையின் சர்வதேச ஆங்கில பெயரான Monkeypox என்பதை மாற்ற வேண்டும் என்று பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். ஆப்பிரிக்காவைப் பற்றி ஏற்கனவே இருக்கும் இனவெறியை, இது மேலும் அதிகரிக்கும் என்று பலரும் கருதினார்கள். 

ஒப்பீட்டளவில் லேசான வைரஸ் நோயான குரங்கம்மை, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள பல நாடுகளில் பரவலாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இது உலகம் முழுவதும் பரவியது. உலகளவில் 80,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை வழக்குகள் இருப்பதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 30 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மேலும் படிக்க | தினமும் பீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? பீரின் பக்கவிளைவுகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล