வாஷிங்டன் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலிருக்கும் செசாபீக் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஆறு பேர் கொல்லப்பட்டனர்; தாக்குதல் நடத்தியவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும் இதுவரை, ௬௦௦க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் கொலராடோ வில், ஓரினச் சேர்க்கையாளர் கிளப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; ௧௮ பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், விர்ஜினியா மாகாணத்தின் செசாபீக் நகரில் உள்ள, ‘வால்மார்ட்’ என்ற பிரபல வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

அந்த வணிக வளாகத்தின் ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்குள் நுழைந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் சரமாரியாக சுட்டதாகவும், இதில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலாளர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அந்த மேலாளரின் பெயர் வெளியிடப்பட வில்லை. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், நான்கு பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்படுவது, இந்தாண்டில் இதுவரையிலும், ௪௦ முறை நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த, ௨௦௧௯ல் ௪௫ சம்பவங்கள் நடந்தன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: