Loading

மகாராஷ்டிராவிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்னை இருந்து வருகிறது. மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் பெல்காமை மகாராஷ்டிராவுடன் இணைக்கவேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகிறது. தற்போது கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை மகாராஷ்டிராவில் உள்ள எல்லையோர மாவட்டமான சாங்கிலியில் இருக்கும் ஜாட் தாலுகாவில் உள்ள 40 கிராமங்களை கர்நாடகாவுடன் இணைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ஜாட் தாலுகாவிற்கு உரிமை கோருவது குறித்து கர்நாடகா தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஜாட் தாலுகாவில் இருக்கும் கிராமங்களில் குடிநீர் பிரச்னை பெரிய அளவில் உண்டான போது அக்கிராம பஞ்சாயத்துக்கள் தங்களை கர்நாடகாவுடன் இணைக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது” என்றார். கர்நாடகா முதல்வரின் இந்தக் கருத்துக்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்று மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் கேட்டுக்கொண்டார்.

பசவராஜ் பொம்மை

பசவராஜ் பொம்மை

இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் கர்நாடகாவின் பெல்காம் மற்றும் கார்வார் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மூலம் போராடி வருகிறோம். தற்போது கர்நாடகா கேட்கும் எந்த ஒரு கிராமத்தையும் மகாராஷ்டிரா விட்டுக்கொடுக்காது. ஜாட் தாலுகாவில் இருக்கும் கிராமங்கள் 2012ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றின. அது பழையது. புதிதாக கர்நாடகாவிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை” என்று தெரிவித்தார்.

இந்தப் பிரச்னை கையாள கர்நாடகா அரசு வழக்கறிஞர்கள் குழு ஒன்றையும் அமைத்திருக்கிறது. மகாராஷ்டிராவும் இதற்காக இருவர் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது. கர்நாடகா எல்லை பிரச்னை குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து பேச மகாராஷ்டிரா அரசு தனிக்குழு ஒன்றையும் டெல்லிக்கு அனுப்ப முடிவுசெய்திருக்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *