இந்திய ரூபாய் 15 லட்சம் பணத்துடன் கூடிய ரொக்கப் பையை டாக்ஸியில் மறந்து சென்ற கென்யாவைச் சேர்ந்த பெண்ணிடம் மும்பை போலீஸார் பணத்தைக் கண்டுபிடித்துத்  திருப்பி அளித்துள்ளனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது. 15 லட்சம் பணத்துடன் தனது பையை டாக்ஸியில் மறந்துவிட்டதாக கொலாபா காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கையைப் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

கொலாபா காவல்துறை விரைந்து டாக்ஸியைக் கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்யத் தொடங்கியது. கென்யாவைச் சேர்ந்த பெண் அளித்த புகாரை அடுத்து சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஸ்கேன் செய்தனர். அதன் வழியாக காரின் நம்பர் ப்ளேட் எண் கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் அந்த டாக்ஸி இருக்கும் பகுதியை தேடத் தொடங்கினர். இதை அடுத்து

டாக்சி டிரைவர் மும்பையின் கல்பாதேவி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடமிருந்து போலீசார் ரொக்கப் பையைக் கண்டெடுத்தனர்.பின்னர் அந்தப் பணப்பை கென்யாவைச் சேர்ந்த அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக, பாலியல் குற்ற வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அண்மையில் பரபரப்பான தீர்ப்பு ஒன்றை அளித்தது குறிப்பிடத்தக்கது.

பெண்களை "ஐட்டம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்தால் அதுவும் பாலியல் துன்புறுத்தல்தான் என்று மும்பை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

சிறுமியை "ஐட்டம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்த நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. "இந்த வார்த்தை ஆண்களால் பெண்களை இழிவான முறையில் பேச பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது பாலியல் ரீதியாக அவர்களைப் புறக்கணிக்கிறது" என்று சிறப்பு நீதிபதி எஸ்.ஜே.அன்சாரி தனது தீர்ப்பில் கூறினார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 இன் கீழ் அந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றவாளி மீது குற்றம் சாட்டப்பட்டது.

“இதுபோன்ற குற்றங்களை கடுமையாகக் கையாள வேண்டும். ஏனெனில் இதுபோன்ற ரோமியோக்களுக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும். பெண்களின் மரியாதைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சில குறிப்பிட்ட வார்த்தைகளால் அழைக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *