வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வானிலை மைய அறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை முதலே பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் திடீரென்று, சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

 

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, பேருந்து நிலையம், வாலாஜாபாத், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதன் காரணமாக,  பொதுமக்களும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் இயல்பு வாழ்க்கை பாதித்து அவதிப்பட்டு வருகின்றனர்.

TN Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

 

 

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு:

நேற்று (22.11.2022)  மத்தியமேற்கு  மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து இன்று (23.11.2022) காலை தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்  நிலவுகிறது.

23.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

News Reels

24.11.2022 முதல் 27.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சோழவரம் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 3, சென்னை கலெக்டர் அலுவலகம் (சென்னை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 2,  கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), பொன்னேரி (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), தண்டையார்பேட்டை (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), கலவை AWS  (இராணிப்பேட்டை), சென்னை நுங்கம்பாக்கம், TNAU ஏதாப்பூர் (சேலம்), MRC நகர் ARG (சென்னை) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: