மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், திரைக்கலைஞருமான கமல்ஹாசன் ஒருபக்கம் கட்சி வேலைகள், மறுபக்கம் திரைப்பட வேலைகள் எனத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். அண்மையில், தெலுங்கு இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்தை ஹைதராபாத்தில் நேரில் சந்தித்த கமல்ஹாசன் நேற்று சென்னை திரும்பினார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

அதைத் தொடர்ந்து நேற்றிரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட… கமல்ஹாசன் போரூரிலுள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து கமல்ஹாசனுக்கு லேசான காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு லேசான காய்ச்சல்தான் என்றும், இன்னும் ஓரிரு நாள்களில் வீடுதிரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.

ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாக அறிக்கை

ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாக அறிக்கை

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *