மோசமான சமந்தாவின் உடல்நிலை

யசோதாவின் வெற்றி சமந்தாவிற்கு மகிழ்ச்சியை தந்தாலும் படத்தின் வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். ஏனென்றால், அவருக்கு மயோசிடிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில், சமந்தாவின் உடல் நிலை கொஞ்சம் தெரிவந்தது,

தற்போது மீண்டும் சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்ததால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சாம் தரப்பில் இருந்து இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் சாம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்

News Reels

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், மக்கள் நீதிமய்ய தலைவருமாகிய கமல்ஹாசன் ஹைதராபாத் சென்றார். அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேற்று மதியம் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

மஞ்சிமா மற்றும் கெளதம் கார்த்திக் ஜோடியின் செய்தியாளர் சந்திப்பு 

நேற்று சென்னை, வடபழனியில் செய்தியாளர்களை ஜோடியாக சந்தித்த கவுதம் கார்த்திக் –  மஞ்சிமா இருவரும் பேசியதாவது, “வரும் நவ.28 எனக்கும் மஞ்சிமாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்குத் தேவை. இது ஒரு சிறிய, தனிப்பட்ட குடும்ப நிகழ்வு. ரிசப்ஷன் நிகழ்வு தனியாக நடத்தப்படவில்லை. திருமணத்துக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறோம்” என்றார்.

நிறைவடைந்தது பத்து தல ஷூட்டிங் 

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு பிறகு, பத்து தல படத்தில் தன் கவனத்தை செலுத்தினார். கர்நாடகா மாநிலம், பெல்லாரி, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் முன்னதாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தின் இறுதி நாளில் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து சிம்பு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

காந்தாரா ஓடிடி ரிலீஸ் 


400 கோடி வசூலான தகவலை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் வண்ணம் காந்தாரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணி முதல் (நவம்பர் 24 ஆம் தேதி) அமேசான் பிரைம் தளத்தில் இப்படத்தை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล