ஆலுர்: விஜய் ஹசாரே தொடரில் ஜெகதீசன் நான்காவது சதம் கைகொடுக்க தமிழக அணி 151 ரன்னில் ஹரியானாவை வென்றது.

இந்தியாவின் ‘லிஸ்ட் ஏ’, விஜய் ஹசாரோ கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. ஆலுரில் (ஆந்திரா) நடந்த ‘குரூப் சி’ போட்டியில் தமிழகம், ஹரியானா மோதின. ‘டாஸ்’ வென்ற ஹரியானா பீல்டிங் தேர்வு செய்தது.

ஜெகதீசன் அபாரம்

தமிழக அணிக்கு நாராயணன் ஜெகதீசன், சாய் சுதர்சன் ஜோடி மீண்டும் நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 151 ரன் சேர்த்த போது, சாய் சுதர்சன் (67) அவுட்டானார். பாபா அபராஜித் (3), கேப்டன் பாபா இந்திரஜித் (2), கவுசிக் (5) ஏமாற்றினர். ஜெகதீசன் இத்தொடரில் தொடர்ந்து நான்காவது சதம் விளாசி சாதனை படைத்தார். இவர் 123 பந்தில் 128 ரன் எடுத்தார். ஷாருக்கான் 46 ரன் எடுத்தார். தமிழக அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 284 ரன் எடுத்தது. சாய் கிஷோர் (8), முகமது (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கைத் துரத்திய ஹரியானா அணிக்கு தமிழக பவுலர்கள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். சந்தீப் வாரியர், முகமது, சோனு யாதவ், தலா 2 விக்கெட் சாய்க்க, பாபா அபராஜித் 3 விக்கெட் கைப்பற்றி மிரட்டினார். ராகுல் டிவாட்யா அதிகபட்சம் 34 ரன் எடுத்தார். ஹரியானா அணி 28.3 ஓவரில் 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழக அணி 151 ரன்னில் வெற்றி பெற்றது.

 

நான்காவது வீரர்

விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி வீரர் ஜெகதீசன் ரன் மழை பொழிகிறார். கடந்த மூன்று போட்டியில் 114, 107, 168 ரன் எடுத்தார். நேற்று இத்தொடரில் தொடர்ந்து நான்காவது சதம் விளாசிய ஜெகதீசன் 128 ரன் எடுத்தார். இதையடுத்து ‘லிஸ்ட் ஏ’ அரங்கில் இச்சாதனை படைத்த உலகின் நான்காவது வீரர் ஆனார்.

* இதற்கு முன் இலங்கையின் சங்ககரா, தென் ஆப்ரிக்காவின் ஆல்விரோ பீட்டர்சன், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் இதுபோல சாதித்தனர்.

* விஜய் ஹசாரே தொடரில் கோஹ்லி, படிக்கல், பிரித்வி ஷா, ருதுராஜுக்குப் பின் 4 சதம் விளாசிய ஐந்தாவது வீரர் ஆனார் ஜெகதீசன்.

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล