ஹனுமேன் ஒரு சர்வதேச திரைப்படம் : இயக்குனர் தகவல்

23 நவ, 2022 – 13:33 IST

எழுத்தின் அளவு:


Hanuman-is-international-movie-says-dierctor

ராமாயணத்தில் ராமனின் தூதனாக, தோழனாக இருக்கும் கதாபாத்திரம் ஹனுமன். இந்தகால ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் செய்யும் வேலைகளை புராணகாலத்திலேயே அனுமன் செய்து விட்டார். இதனால் ஹனுமன் கேரக்டரை சூப்பர் ஹீரோவாக்கி ஹனுமேன் என்ற பெயரில் தயாராகி உள்ளது பான் இண்டியா படம்.

ஜோம்பி ரெட்டி படத்திற்கு பிறகு அதில் நடித்த நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமார், வினய்ராய், வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் பிரசாந்த் வர்மா பேசியதாவது: சின்ன வயதிலிருந்து அனுமன் எனக்கு விருப்பமான கடவுள். அவரைப் பற்றி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமெடுத்திருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் பட்ஜெட்டை பொருத்தமட்டில் நாங்கள் திட்டமிட்டதை விட ஐந்து முதல் ஆறு மடங்கு கூடுதலாக செலவானது. எனவே அனுமன் தெலுங்கு படம் அல்ல. பான் இந்திய படமும் அல்ல. இது ஒரு சர்வதேச திரைப்படம்.

அனுமன் மிகப்பெரிய சூப்பர் ஹீரோ. அவர் சூப்பர் மேன் மற்றும் பேட்மேனை விட சக்தி வாய்ந்தவர். நம்மிடம் பல மார்வெல் மற்றும் டிசி சூப்பர் ஹீரோக்கள் ஏராளமாக உள்ளனர். சிறுவயதிலிருந்தே எனக்கு புராணக் கதைகளை கேட்பதும் பிடிக்கும். வாசிப்பதும் பிடிக்கும். முதன் முறையாக அனுமன் என்ற புராண கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறேன். இது முதன்மையானது. முக்கியமானது.

பேட்மேனுக்கான கோதம் சிட்டி எனும் மாய உலகத்தை போல், அனுமன் படத்திற்காக அஞ்சனாத்ரி என்ற கற்பனையான உலகை நிர்மாணித்திருக்கிறோம். காட்சிகள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக இருக்கும். நாங்கள் இதற்காக பல விஎப்எக்ஸ் ஸ்டுடியோக்களுடன் பணியாற்றி இருக்கிறோம்.

இந்தப் படத்தை தயாரிக்கும் காலகட்டத்தில், எங்களால் மூன்று படங்களை தயாரித்திருக்க முடியும். இதுபோன்ற பிரம்மாண்டமான படைப்பிற்கு மொழி தடையாக இருக்காது. இந்த திரைப்படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிடுவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். இதற்காக அந்தந்த மொழிகளில் சில காட்சிகளை படமாக்கி இருக்கிறோம். இதனால் அவர்களின் நேரடி படம் போன்று உணர்வார்கள். ‘ஹனு-மேன்’ ஒரு சர்வதேச திரைப்படம். நாங்கள் ஒரு சிறந்த படைப்பை உருவாக்கி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *