குஜராத்தில் வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற காட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இப்படி தேர்தல் வேலைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க அஞ்செலி, நவ்சாரி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்திருந்தனர். இந்த நிலையில் குஜராத்தில் ஒரு கிராமம் சற்று வித்தியாசமான முடிவை எடுத்திருக்கிறது.

குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தல்

ராஜ்கோட் மாவட்டத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள ராஜ் சமாதியாலா எனும் கிராமம், அரசியல்வாதிகள் யாரும் இங்கு பிரசாரம் செய்யக்கூடாது என முடிவெடுத்து அதற்குத் தடையும் விதித்திருக்கிறார்கள். இந்த நடைமுறை கடந்த 40 ஆண்டுகளாக கிராமத்தில் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இதைவிடவும் ஆச்சர்யமளிப்பது என்னவென்றால், தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு 51 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று கிராமம் முடிவெடுத்திருக்கிறது.

ராஜ் சமாதியாலா கிராமம் - குஜராத்

ராஜ் சமாதியாலா கிராமம் – குஜராத்
ட்விட்டர்

அப்படி யாரேனும் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அதுபற்றி முன்னரே தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. கிராம அபிவிருத்திக் குழுவால் (VDC) உருவாக்கப்பட்ட இந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குக் கிராம மக்கள் கட்டுப்பட்டுள்ளனர். இத்தகைய விதிகள் மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு விதிகளும் இந்த கிராமத்தில் பின்பற்றப்படுகின்றன. வேட்பாளர்களை பிரசாரம் செய்ய அப்பகுதிக்குள் அனுமதிப்பது பாதகமாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் நினைக்கிறார்கள்.

ராஜ் சமாதியாலா கிராம தலைவர்

ராஜ் சமாதியாலா கிராம தலைவர்

இதுகுறித்து பேசிய கிராமத்தின் தலைவர் (Sarpanch), “கிராமத்தில் அரசியல் கட்சியினர் யாரையும் பிரசாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற விதி 1983-ம் ஆண்டு முதல் இருக்கிறது. ராஜ் சமதியாலா கிராமத்தில் பிரசாரம் செய்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். எங்கள் கிராம மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு 51 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். யாரேனும் எந்த காரணத்திற்காகவும் வாக்களிக்க முடியாவிட்டால், முன்கூட்டியே அவர்கள் அனுமதி பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.

1,700 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில், 995 பேர் வாக்காளர்களாக இருக்கின்றனர். மேலும், இந்த கிராமத்தில் வாக்களிக்காமல் போவதற்கு மட்டுமல்ல, குப்பைகளைக் கொட்டுவதற்காகக் கூட அபராதம் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்தினரின் கூற்றுப்படி, பக்கத்துக்கு கிராமங்களும் இதுபோன்று முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: