உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மற்றுமொரு அப்செட் நேற்று நிகழ்ந்திருக்கிறது. ஜப்பானுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான போட்டியில் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் வென்றிருக்கிறது.

குரூப் ஈ பிரிவை சேர்ந்த ஜெர்மனியும் ஜப்பானும் நேற்றிரவு கலீபா சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. நான்கு முறை உலகக்கோப்பை சாம்பியன் மற்றும் உலக அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஜெர்மனியின் முதல் போட்டி என்பதால், கால்பந்து ரசிகர்கள் அனைவரும் இந்தப் போட்டியினை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். போட்டி ஆரம்பித்தில் அணி வீரர்கள் எந்தவித ஆர்ம் பேண்டும் கையில் அணியக்கூடாது என்று கத்தார் அரசு விதிமுறை விதித்ததால், அதை எதிர்க்கும் விதமாக ஜெர்மனி வீரர்கள் அனைவரும் தங்கள் வாயை கையால் மூடிக்கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். இதனால் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

போட்டி ஆரம்பித்த 33 வது நிமிடத்தில், கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஜெர்மனி அணி வீரர் இல்கே குண்டோகன் ஒரு கோல் அடித்தது.

Germany

போட்டியின் முதல் பாதி வரை மைதானத்தில் ஜெர்மனியின் ஆதிக்கமே நிரம்பியிருந்தது. பொசசனும் அவர்களிடம்தான் அதிகம் இருந்தது. ஆனாலும் ஜெர்மனியால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. ஜெர்மனி வீரர்கள் பல சமயங்களில் பந்தை தங்களின் பாதி பகுதியிலேயே வைத்திருந்தனர். ஜப்பானின் டிபன்ஸை அத்தனை எளிதாக அவர்களால் உடைக்க முடியவில்லை. ஜெர்மனி அடித்த அந்த ஒரு கோலுமே தப்பித்தவறி ஜப்பானின் கீப்பர் செய்த ஒரு தவறினால் மட்டுமே வந்தது.

முதல் பாதி முடிந்தவுடனும் இதே நிலைதான் தொடர்ந்தது.கடைசிக்கட்டங்களில்தான் தன் அதிர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்தது ஜப்பான்.

போட்டியின் 75 வது நிமிடத்தில் ஜப்பான் வீரரான ரிஸ்து டோன், 6 யார்ட் தூரத்தில் இருந்து பந்தை உதைக்க, அது ஜெர்மனியின் கோல் கீப்பரான மேனுவல் நீயரை தாண்டி சென்று கோல் ஆகியது. ஜப்பானின் மெஸ்சி என்று இவரை சும்மாவா சொல்கிறார்கள்? இரண்டு அணிகளுமே சமமாக இருந்த சமயத்தில், 83 வது நிமிடத்தில் டகுமோ ஆசானோ ஒரு கோல் அடித்து அசத்த 2-1 என்ற கணக்கில் ஜப்பான் முன்னேறியது.

Doan

அதற்கு பிறகு ஜெர்மனியால் இரண்டாவது கோல் போடவே முடியவில்லை. போட்டி முடிவில் ஜப்பான் வெற்றி பெற்றது. ஜப்பான் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான இரண்டு காரணங்கள், அந்த அணியின் வீரர் மிட்டோமா மற்றும் ஜப்பான் அணியான் மேலாளர் ஹஜிமே மோரியாசு. ஹஜிமே மோரியாசு இந்த ஆட்டத்தில் செய்த சப்ஸ்டிடூயசன் தான் ஜப்பான் வெற்றிக்கு ஒரு மிக முக்கியமான காரணம். ரிஸ்து டோன் கோல் அடிக்கவும், இறுதியில் டகுமோ ஆசனோ கோல் அடிக்கவும் அசிஸ்ட் செய்து உதவி புரிந்தது மிட்டாமோவே. அதனால் அவரின் பங்கும் இந்தப் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது

Asano

போட்டியில் ஜப்பான் அணி வெற்றி பெற்றவுடன் கால்பந்து ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் பரவலாக மீம் போட்டு வருகின்றனர். போட்டியில் ஜப்பான் வென்றதை மைத்தானத்திலேயே உற்சாகமாக கொண்டாடிய ஜப்பான் ரசிகர்கள் போட்டி முடிந்தபின், அவர்கள் போட்ட குப்பையை அவர்களே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது உலக கால்பந்து ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் மூன்று புள்ளிகளைப் பெற்று ஜப்பான் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கோஸ்டாரீகா அணியினை ஸ்பெயின் வீழ்த்தியிருந்தது.மொராக்கோ குரோஷியா இடையேயான ஆட்டம் சமனில் முடிய கனடாவை பெல்ஜியம் வீழ்த்தியிருந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล