புதுச்சேரி,-புதுச்சேரியில், இளம்பெண் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி, அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சமூக வலைதளங்களில் தனது பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த இளம்பெண் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கப்பட்டது. அதில், அந்த இளம் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதுடன், அவரின் நண்பர்களுக்கும் போலி கணக்கு மூலம் குறுச்செய்தி அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண், இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் உடடினயாக வழக்குப் பதிந்து, இன்ஸ்டாகிராமில் அவரது போலி கணக்கை முடக்கினர். மேலும், அவரின் பெயரில் போலி கணக்கு துவங்கியது யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement