வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: கர்நாடகாவிற்கு சொந்தமான பெலகாவி பகுதியில் ஒரு அங்குல நிலம் கூட மஹாராஷ்டிராவிற்கு விட்டு கொடுக்க மாட்டோம்.என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

கர்நாடக – மஹாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. பெலகாவியை மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

latest tamil news

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியது, பெலகாவி பகுதியை மஹாராஷ்டிராவுடன் இணைக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் பட்னவிஸ் தெரிவித்து வருகிறார். வருகிறது. அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. கர்நாடகவின் நிலம், நீர், எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. எல்லை பகுதியில் ஒரு அங்குல நிலம் கூட மஹாராஷ்டிராவிற்கு விட்டு கொடுக்க மாட்டோம்.

மஹாராஷ்டிராவில் சோலாப்பூர், அக்கலகோட்டை பகுதியில் கன்னடர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அந்த பகுதிகளை கர்நாடகத்தில் சேர்க்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล