ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள ‘லக்கி டீகடையை’ தெரியாதவர்களே அங்கு இருக்க முடியாது. சமாதிகளுக்கு நடுவே இருக்கும் இந்த டீக்கடை மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதே இதன் பெருமை.

குஜராத்தில் ஆமதாபாதின் ஜமால்பூர் காதியாவில் உள்ள லக்கி டீக்கடையை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அப்துல் ராஜக் மன்சூரி நடத்தி வருகிறார். சமாதிகளுக்கு நடுவே இருக்கும் இந்த டீக்கடையின் சிறப்பு அம்சம், முழுக்க சைவ உணவு மட்டுமே பரிமாறப்படுவது தான்.

முஸ்லிம்களின் சமாதிகள் இருந்த இந்த இடத்தில், வேப்ப மர நிழலில், தள்ளுவண்டியில் டீக்கடையை நடத்தி வந்தார் மன்சூரி. பல்வேறு மதத்தினரும் அவருடைய கடை டீக்கு ரசிகர்களாக மாறினர்.

ஆதரவு பெருக, பெருக கடையை அங்கேயே விரிவுபடுத்தினார் மன்சூரி. வளைந்த மரங்களுக்கு இடையே ௨௬ சமாதிகளுக்கு இடையில் அவர் கடை அமைந்துள்ளது. சமாதிகளுக்கு, இரும்பு கேட் பொருத்தியுள்ளார்.

இந்தக் கடையில் மதம் என்ற பேதம் கிடையாது. அனைத்து மதத்தினரும் அவருடைய கடைக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். சூடான டீ மற்றும் சுவையான தின்பண்டங்கள் எப்போதும் கிடைக்கும். வயது பேதமில்லாமல் பல்வேறு தரப்பினரும் இங்கு வருகை தருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล