மத கலவரத்தை தூண்டுகிறது: தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய கோரிக்கை

11/11/2022 12:01:49 AM

திருவனந்தபுரம்: இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருப்பவர், அதா சர்மா. தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’, பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் இந்தி டீசர் வெளியானது. அதில் முஸ்லிம் பெண் போல் பர்தா அணிந்து தோன்றிய அதா சர்மா, ‘என் பெயர் ஷாலினி உன்னி கிருஷ்ணன். இப்போது என் பெயர் பாத்திமா. நான் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டேன். தற்போது நான் ஆப்கானிஸ்தான் சிறையில் இருக்கிறேன். என்னைப்போல் சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் 32 ஆயிரம் பெண்கள் இருக்கின்றனர். எங்களை காப்பாற்ற யார் முன்வருவார்கள்?’ என்று பேசியிருந்தார். இதையடுத்து அந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கேரள போலீசில் புகார் அளித்துள்ளனர். இது கேரள மாநிலத்துக்கு களங்கம் விளைவிப்பது மட்டுமின்றி, மத கலவரத்தை தூண்டும்விதமாக இருக்கிறது என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கேரள போலீசின் சைபர் க்ரைம் பிரிவுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล