நடந்து முடிந்த தேர்தலில் யாருக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் மலேசிய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அங்கு கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது டெபாசிட் இழந்து படுதோல்வியடைந்துள்ளார்.

மலேசியாவில் 15-வது பொதுத்தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 2 இடங்களில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. 220 தொகுதிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

மலேசியா அரசியல் கட்சிகளில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி 80 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 111 இடங்களை அந்த கூட்டணி பெறவில்லை. நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திய தேசிய முன்னணி கூட்டணி வெறும் 35 இடங்களில்தான் வென்றது.

மலேசியாவின் முக்கியமான அம்னோ கட்சியும் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர், கெடா மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான லங்காவி தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்து பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். 53 ஆண்டுகளில் மகாதீர் சந்திக்கும் முதல் தேர்தல் தோல்வி இது.

மகாதீரைப் போல பல முக்கிய அரசியல் தலைவர்களும் இத்தேர்தலில் தோல்வியை சந்தித்திருக்கிறார்கள். பக்கத்தான் ஹராப்பான் தலைவரின் மகள் நூருல் இஸ்ஸா, பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கவிழ்த்த அஸ்மின் அலி, முன்னாள் அமைச்சர் கைரி ஜமலூதீன், முன்னாள் அமைச்சர் தெங்கு ஸஃப்ருல், மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் தோல்வி அடைந்த முக்கியமானவர்கள்.

எஞ்சின் கோளாறு.. குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்… 8 பேர் பலி!

இந்த தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் அந்நாட்டு இளம் வாக்காளர்கள். வழக்கத்தைவிட இந்த தேர்தலில் வாக்களித்த இளம் வாக்காளர்கள் அதிகம். அவர்களது வாக்குகள் மலேசியா அரசியலை திணறடித்துள்ளது. இதுவரை இல்லாத, புதிய அரசையே மலேசியாவின் இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஆட்சி அமைக்க விரும்பும் அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவு எம்பிகளின் பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மது ஷா அறிவித்துள்ளார். இதையடுத்து இன்டைறக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவிற்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.

சீனா-ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து…36 பேர் பலி

கூட்டணி ஆட்சி அமைந்தால் பிரதமராக முஹிதின் யாசின் பரிந்துரைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மலேசியாவின் அரசியல் வரலாற்றில் கூட்டணி ஆட்சி அமைவது இது தான் முதல் முறை. அதிலும், இளம் தலைமுறை வாக்காளர்களால் மலேசிய அரசியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: ரொசாரியோ ராய்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล