வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 0-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், வருகிற 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி அங்கிருந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

image

அங்கு 3 ஒருநாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களின் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, யாஷ் தயாள் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிற்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் மற்றும் ஆல் ரவுண்டர் ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், முகமது ஷமி ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), ஷிகார் தவான், விராட் கோலி, ராஜ்தத் படிதார், ஸ்ரேயாஸ் ஐய்யர், ராகுல திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஷமி, சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล