Loading

சிட்னி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 72 ரன்னில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 1–0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது போட்டி சிட்னியில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஹேசல்வுட், பேட்டிங் தேர்வு செய்தார்.

ஸ்மித் அபாரம்

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (16), ஹெட் (19) ஜோடி சுமார் துவக்கம் தர, ஸ்மித், லபுசேன் (58) இணைந்து அணியை மீட்டனர். கேரி ‘டக்’ அவுட்டாக, ஸ்மித் 94 ரன்னுக்கு அவுட்டாகி திரும்பினார். மிட்சல் மார்ஷ் 50 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 280 ரன் எடுத்தது. இங்கிலாந்தின் அடில் ரஷித் 3 விக்கெட் சாய்த்தார்.

பில்லிங்ஸ் ஆறுதல்

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (0), பில் சால்ட் (23) ஜோடி ஏமாற்றம் தர, மலான் ‘டக்’ அவுட்டானார். வின்ஸ், பில்லிங்ஸ் இணைந்து அணியை மீட்டனர். 27 ஓவரில் இங்கிலாந்து அணி 155/3 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. பின் வின்ஸ் (60), மொயீன் அலி (10), பில்லிங்ஸ் (71) என வரிசையாக அவுட்டாக, போட்டி ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது.

கர்ரான் (0), வோக்ஸ் (7) நிலைக்கவில்லை. டாசன் 20 ரன் எடுத்தார். கடைசி 53 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. 38.5 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் ஆட்டநாயகன் ஸ்டார்க் 4, ஜாம்பா 4 விக்கெட் சாய்த்தனர். ஆஸ்திரேலிய அணி 2–0 என தொடரை கைப்பற்றியது.

 

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *