திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள கட்டா குஷ்டி திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் தொடர்பாக படக்குழுவினர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் சுவாரசிய நிகழ்வுகள் குறித்தும் படத்தின் மையக் கருத்து குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய விஷ்ணு விஷால், “ஆணும் பெண்ணும் சமம். கணவன் மனைவி இடையே நிகழும் ஈகோ கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது. தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட் படங்களை விட அதிக அளவில் இந்திய அளவில் பேசப்படுகிறது. திரைப்படங்களில் மக்கள் தற்போது அதிக அளவில் கண்டெண்ட் எதிர்பார்க்கிறார்கள். திரைப்படங்களின் மீதான மக்கள் பார்வையும், எதிர்பார்ப்புகளும் அறிவுப்பூர்வமாக அதிக அளவில் வளர்ந்துள்ளன. தொடர்ந்து தமிழ் படங்களுக்கு மற்ற திரை உலகினர் மத்தியில் காட்டப்படும் வரவேற்பிற்கு பின்னால் சில அரசியல் இருப்பதாக கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் குறித்து பேசும் போது, ”அந்த புகைப்படங்களை வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு இயக்குனர்கள் கதை எழுதும் போது நானும் அதற்கு பொருந்துவேன் என நினைக்கும் வகையிலும், பிட்னஸ் தொடர்பாகவும் மட்டுமே வெளியிட்டேன். ரன்வீர் சிங் புகைப்படம் எடுத்து வெளியிடும் முன்னரே இந்த புகைப்படங்களை தன் மனைவி எடுத்து வைத்து விட்டார். உடலை கட்டுருதியாக பேணுவதை பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் போது பாராட்டுபவர்கள், ஆண்கள் வெளியிடும் போது அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதில்லை” எனத் தெரிவித்தார்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமே அனைத்து திரைப்படங்களையும் கட்டாயப்படுத்தி வெளியிடுகிறதா என்ற கேள்விக்கு, “நாங்கள் கேட்பதால் தான் அவர்கள் முன்வந்து வெளியிடுகிறார்கள். எனது படங்களுக்கு சிக்கல் வந்த போதும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆட்சியில் இல்லாத போதும், சிலுக்குவார் பட்டி சிங்கம் என்ற திரைப்படத்தை எனக்காக வெளியிட்டு கொடுத்திருந்தார்கள். எனவே அனைத்து திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை” எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் திரைப்படங்களை தயாரித்து வழங்குகிறாரா என்ற கேள்விக்கு, “சமூக வலைதளங்களில் இதை படித்தேன். அவர் அவ்வாறு தமிழ் திரையுலகில் தனது புதிய முயற்சிகளை எடுத்தால் அது வரவேற்கத்தக்கது தான். தமிழகத்திற்கும் அவருக்கும் இடையிலான உறவு அனைவரும் அறிந்ததே” எனப் பதில் அளித்தார்.

வாரிசு ரிலீஸ் நெருக்கடிக்கு தொடர்பாக பேசிய அவர், ”தமிழ் திரையுலகில் மற்ற அனைத்து மொழி திரைப்படங்களையும் முழு மனதுடன் வரவேற்கிறோம். ஆனால் தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதுக்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண