மகாராஷ்டிராவில் பள்ளியில் மது அருந்திவிட்டு வகுப்பறையிலேயே பிரின்சிபல் படுத்து உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தின் மேக்லாத் பகுதியிலுள்ள பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மதுபோதையிலிருந்த பிரின்சிபல், சட்டையை கழற்றிய நிலையில், வகுப்பறையின் தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ இணையங்களில் பரவிய நிலையில் பிரின்சிபல் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ON CAMERA: A school #principal was found sleeping inside a #classroom after allegedly consuming #alcohol in #Amaravati, Maharashtra.https://t.co/Tz7w3t3bZN#Viral #News #maharashtranews #Maharashtra #students #education #video #drunk #teacher #school pic.twitter.com/KZuUzvFZDL
— Free Press Journal (@fpjindia) November 23, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM