கேரளாவின் மூணாறு மலைப்பகுதி அம்மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று. இந்த சுற்றுலா தளத்தின் இயற்கை அழகை ரசிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வருவதுண்டு. இதனால் அங்கு அதிகளவில் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளும் சேகரமாகின்றன. மலைப்பகுதிகளில் போடப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் அங்குள்ள விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்டுத்துகின்றன.

பிளாஸ்டிக் குப்பை சேகரித்தல்..

மூணாறு மலைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மூலம் போடப்படும் குப்பைகளை சுத்தப்படுத்துவதே பெரும் சவாலான காரியமாக இருந்து வந்தது. ஆனால்  மூணாறு கிராம பஞ்சாயத்து குப்பை பிரச்சினைக்கு இப்போது ஒரு நிரந்தரமான தீர்வினை கண்டுள்ளது. மூணாறு பகுதியில் கழிவு மேலாண்மை அமைப்பு  புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூணாறு  மலைப்பகுதியை பூஜ்ஜிய கழிவு மண்டலமாக மாற்றும் நோக்கத்துடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இந்த கழிவு மேலாண்மை அமைப்பு ஹரித கேரளா மிஷன், மூணாறு கிராம பஞ்சாயத்து ரெசிட்டி ஹில்டாரி திட்டத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின்  (UNDP) உதவியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் குப்பை சேகரித்தல்..

இதற்கு முன், பொதுமக்களிடமிருந்து மீதமான உணவு பொருட்கள் மற்றும் இதர பிற குப்பைகள் பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு மூணாறுக்கு அருகே உள்ள கல்லார் பகுதியில் சேகரித்து வைக்கப்படும்.

கழிவு மேலாண்மை அமைப்பின் ஒரு பகுதியாக, மக்காத குப்பைகளை இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. இரண்டு டன் பிளாஸ்டிக் கழிவுகளை பேல் செய்யும் திறன் கொண்ட கன்வேயர் பெல்ட்டுகள் மற்றும் பேலிங் மெஷின் ஆகியவை இந்த கழிவு மேலாண்மை அமைப்பில் உள்ளது. அதன் பின்னர் மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களுக்கு விற்கப்படுகிறது.

உயிர் கழிவுகள், குளிர்பிரதேச பகுதிகளுக்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இனோகுலம் மூலம் விண்டோ உரமாக்கல் அமைப்பின் மூலம் உரமாக மாற்றப்படுகின்றன.

இந்த முறையை பயன்படுத்தி தினமும் 2,000 கிலோ உயிர் கழிவுகள் செயலாக்கப்படுகின்றன. தினந்தோறும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்க 20 பேர் கொண்ட ஹரித கர்மா சேனா குழு எல்லா பகுதிகளுக்கும் செல்கிறது.

பிளாஸ்டிக் குப்பை சேகரித்தல்..

இது குறித்து மூணாறு ஊராட்சி செயலர் கே. என். சஹாஜன் கூறுகையில், “இனி மூணாறு கிராம பஞ்சாயத்தில் தினந்தோறும்  குப்பைகள் சேகரிக்கப்பட்டு , உயிர் கழிவுகள் உரமாக மாற்றப்படும். இதுவரை 50,000 கிலோ உரம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது. மூணாறு மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவது பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு சுற்றுலா தளங்களில் 200-க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் இந்த கழிவு மேலாண்மை அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட உரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன” என்று தெரிவித்தார்.

மூணாறில், ‘தூய்மை மூணாறு; பசுமை மூணாறு’ என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஹரித கேரளா மிஷன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் (UNDP) உதவியுடன் இணைந்து இந்த திட்டம் பஞ்சாயத்து மூலம் செயல்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் குப்பை சேகரித்தல்..

UNDP – இந்தியா ஹைரேஞ்ச் மவுண்டேன் லேண்ட்ஸ்கேப் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தலா 4 உறுப்பினர்களை கொண்ட 45 குழுக்கள், மூணாறு ஊராட்சிக்குட்பட்ட வீடுகள், கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். மேலும் அங்குள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து பேசிய ஹரித கேரளா மிஷனின் முன்னாள் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர். சி. என்.சீமா, ”மூணாறில் உள்ள பல்வேறு இடங்களில் பசுமையான சுற்றுலாவை உறுதி செய்வதற்கான புதிய முயற்சி இது” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล